ஆமாம் பொய்தான் சொன்னோம்.. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை தொடர்ந்து ஒப்புக்கொண்ட பிரதாப் ரெட்டி!
ஜெயலலிதாவுக்கு வெறும் காய்ச்சல்தான் என பொய் சொன்னதாக அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: ஜெயலலிதாவுக்கு வெறும் காய்ச்சல்தான் என பொய் சொன்னதாக அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா மரணமடைந்து ஓராண்டு கடந்து விட்டது. ஆனால் அவரது மரணத்தில் உள்ள மர்மம் மட்டும் இன்னும் விலகவில்லை.
கோடான கோடி தொண்டர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்திருந்த ஜெயலலிதாவின் மர்ம மரணம் அவரது அடிமட்ட தொண்டர்களின் மனதில் இன்னும் நெருடலை கொடுத்துக்கொண்டுதான் உள்ளது.

விசாரணை சமிஷன் சம்மன்
ஜெயலலிதா மரணம் குறித்து தமிழக அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள விசாரணை ஆணையம் தொடர்புடைய அனைவருக்கும் ஆஜராக சம்மன் அனுப்பி வருகிறது. பலரும் முன்னிலையாகி விளக்கமளித்து வருகின்றனர்.

செய்தியாளர்களுடன் சந்திப்பு
இந்நிலையில் ஜெயலலிதாவுக்கு 75 நாட்கள் சிகிச்சையளித்த அப்பல்லோ மருத்துவர்களுக்கும் ஆறுமுகசாமி கமிஷன் சம்மன் அனுப்பியுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனைகளின் தலைவர் பிராதப் ரெட்டி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

உண்மைய மறைத்தோம்
அப்போது ஜெயலலிதா ஆபத்தான நிலையில்தான் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என அவர் கூறினார். ஆனால் உண்மையை மறைத்து ஜெயலலிதாவுக்கு காய்ச்சல் என பொய்யாக அறிக்கை தந்ததாக பிரதாப் ரெட்டி ஒப்புக்கொண்டுள்ளார்.

ஆஜராகும் முன்பே..
மக்கள் அச்சப்படக்கூடாது சட்டம் ஒழுங்கு பிரச்சனை வந்துவிடக்கூடாது என்பதற்காகவே உண்மையை மறைத்ததாகவும் அவர் கூறியுள்ளார். விசாரணை கமிஷனில் மருத்துவர்கள் ஆஜராகும் முன்பே பிரதாப் ரெட்டி உண்மையை போட்டுடைத்துள்ளார்.

ஒப்புக்கொண்ட அமைச்சர்
சமீபத்தில் ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என பொய் சொன்னோம் என்று பகிரங்கமாக கூறினார் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன். பொய் சொன்னதற்காக மக்களிடம் அவர் மன்னிப்பும் கேட்டார்.

நாங்க பொய்தான் சொன்னோம்
இந்நிலையில் பிரதாப் ரெட்டியும் நாங்கள் பொய்தான் சொன்னோம் என கூறியுள்ளார். போக போக இன்னும் என்ன மாதிரியான குண்டெல்லாம் வெடிக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்..
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications