மணக்க பெண் கிடைக்காமல் அல்லாடும் 4.12 கோடி இந்திய குடிமகன்கள்!: திடுக் ரிப்போர்ட்
டெல்லி: நம் நாட்டில் 4.12 கோடி ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி சிங்கிளாக வாழ்கிறார்கள்.
உங்களுக்கு திருமணமாகிவிட்டதா? அப்படி என்றால் நீங்கள் அதிர்ஷ்டசாலி. ஏனென்றால் இந்தியாவில் ஆண்களை விட மிக குறைந்த அளவே பெண்கள் உள்ளனர். இதனால் திருமணம் செய்து கொள்ள பெண் இல்லாமல் 4.12 கோடி பேர் சிங்கிளாக வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த தகவல் அண்மையில் வெளியான மக்கள்தொகை கணக்கெடுப்பு விவரத்தின் மூலம் தெரிய வந்துள்ளது.

பெண்கள்
நாட்டில் 5.63 கோடி ஆண்கள் 20களில் உள்ளனர். ஆனால் அந்த வயது வரம்பில் 2.07 கோடி பெண்கள் மட்டுமே உள்ளனர். இதனால் சுமார் 3.55 கோடி பெண்கள் குறைவாக உள்ளனர்.

30கள்
நம் நாட்டில் 70.1 லட்சம் திருமணமாகாத ஆண்கள் 30களில் உள்ளனர். ஆனால் அதே வயது வரம்பில் 22.1 லட்சம் பெண்களே உள்ளனர். இதனால் 47.91 லட்சம் ஆண்களுக்கு திருமணம் செய்ய பெண் இல்லை.

40கள்
20, 30கள் மட்டும் அல்ல 40களில் உள்ள ஆண்களுக்கும் திருமணம் செய்ய பெண்கள் கிடைப்பது இல்லை. நம் நாட்டில் 16.92 லட்சம் ஆண்கள் 40களில் உள்ளனர். அதே 40களில் 8.67 லட்சம் பெண்களே உள்ளனர்.

மணப்பெண்
நாட்டில் உள்ள 6.50 கோடி திருமணமாகாத ஆண்களுக்கு 2.38 கோடி மணப்பெண்களே உள்ளனர். அதனால் 5ல் ஒரு ஆண் வேறு வழியின்றி திருமணம் செய்து கொள்ளாமல் உள்ளார்.

பெண் சிசு கொலை
1970கள், 80கள் மற்றும் 90களில் கோடிக்கணக்கான பெண் குழந்தைகள் கருவிலேயே அழிக்கப்பட்டுள்ளனர். இதனால் தான் ஆண், பெண் சரிவிகிதம் சமமாக இல்லை என்று கூறப்படுகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications