Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 நாள்.. 3 நாட்டு படைகள்.. 200 வீரர்கள்.. நடுக்கடலில் சிக்கிய இந்தியரை மீட்க நடந்த போராட்டம்!

நடுக்கடலில் சிக்கி தவித்த கேரளாவை சேர்ந்த கடற்படை வீரர் அபிலாஷ் டாமி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆஸ்திரேலிய கடல் பகுதியில் கேரள பாய்மர படகு வீரர் மாயம்- வீடியோ

    சென்னை: நடுக்கடலில் சிக்கி தவித்த கேரளாவை சேர்ந்த கடற்படை வீரர் அபிலாஷ் டாமி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளார்.

    இவரை மீட்க மூன்று நாட்கள் பெரிய போராட்டமே நடந்து இருக்கிறது. இந்திய கடற்படையை சேர்ந்த அபிலாஷ் டாமி கோல்டன் குளோப் ரேஸ் என்று அழைக்கப்படும் தனிநபர் ரேஸில் கலந்து கொண்டார்.

    தனிநபர் படகு மூலம் கடலில் 30,000 நாட்டிக்கல் மைல்கள் செல்ல வேண்டும். இந்த நிலையில் இவர் இந்திய பெருங்கடலில் இருந்து 2000 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள போது, கடந்த வெள்ளிக்கிழமை விபத்தில் சிக்கி உள்ளார்.

    காயம் பட்டார்

    காயம் பட்டார்

    சரியாக அந்த சமயத்தில் அங்கு பெரிய புயல் வீசி இருக்கிறது. இந்த மோசமான புயல் காற்று மற்றும் கடல் சீற்றம் காரணமாக இவரது கப்பலில் சில பகுதி நொறுங்கி இருக்கிறது. அதில் காயம்பட்ட இவருக்கு முதுகெலும்பில் சில பகுதிகள் உடைந்து உள்ளது. அதேபோல் கை எலும்பும் உடைந்து இருக்கிறது. இதனால் அவர் படகிற்குள்ளேயே சிக்கி தவித்து வந்துள்ளார்.

    மூன்று நாட்டு படை

    இந்த நிலையில்தான் இந்திய கடற்படை இவரை மீட்க களமிறங்கியது. ஆனால் அவர் எந்த நாட்டு எல்லையில் இருக்கிறார் என்று தெரியாததால் பிற நாடுகளும் உதவிக்கு வந்தது. இந்திய கடற்படை, பிரான்ஸ் நாட்டு கடற்படை, மற்றும் ஆஸ்திரேலிய கடற்படை களமிறங்கியது. மூன்று நாட்டு கடற்பகுதியில் எதற்குள் வேண்டுமானாலும் இவர் இருக்கலாம் என்பதால் தீவிர சோதனை நடந்தது.

    மூன்று நாளை

    வெள்ளிக்கிழமை மாலை தொடங்கிய சோதனை தொடர்ந்து நடந்தது. இதனால் இந்திய கடற்படை இந்திய விமான படையின் உதவியை நாடியது. இரண்டு படைகளும் படை ஆகாய மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும் தீவிர சோதனை நடந்தது. இந்த நிலையில்தான் நேற்று இந்திய விமான படை இவரை கண்டுபிடித்தது.

    200 வீரர்கள்

    200 வீரர்கள்

    மூன்று நாட்டில் இருந்தும் இவரை மீட்க 200 வீரர்கள் பணியில் இருந்தனர். கடைசியில் இவர் ஆஸ்திரேலியா நோக்கி கடல் அலைகளால் நகர்த்தி செல்லப்படுவதாக கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய பெருங்கடலில் குமரி முனையில் இருந்து சுமார் 5000 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்த அவர் ஆஸ்திரேலியா நோக்கி நகர்த்தி செல்லப்பட்டார்.

    எப்படி மீட்கப்பட்டார்

    இந்த நிலையில் அவர் ஆஸ்திரேலியாவின் பெர்த் பகுதியில் இருந்து கடலில் 1500 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்துள்ளார். ஆஸ்திரேலிய விமான படை விமானம் மூலம் இவர் கண்டுபிடிக்கப்பட்டார். அதன்பின் ஆஸ்திரேலிய கடல் படை இவரை தேடி சென்றது. கடைசியாக ஆஸ்திரேலிய கடற்படை மூலம் இவர் மீட்கப்பட்டார்.

    எப்படி இருக்கிறார்

    இவர் மீட்கப்பட்ட போது, படகிற்குள் இருந்துள்ளார். அப்போது பாதி சுயநினைவுடன் இருந்துள்ளார். முதலுதவிக்கு பின் அவர் நினைவு திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. இவருக்கு இப்போது நீர்சத்து குறைபாடு மட்டும் ஏற்பட்டுள்ளது. அதேபோல் இவர் முதுகு எலும்பு காயத்திற்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+