அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. வெளிநாட்டினர் பெரும் ஆர்வம்.. விறுவிறுப்பான முன்பதிவு
மதுரை: ஜல்லிக்கட்டுக்குப் பெயர் போனது மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூர். இங்கு வருடா வருடம் நடைபெறும் பொங்கல் ஜல்லிக்கட்டு விழாவுக்கு பெரும் திரளான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள். கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனதால் பெரும் சோகத்துடன் காணப்பட்ட அலங்காநல்லூர் தற்போது படு பரபரப்பாக காணப்படுகிறது.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. மக்கள் படு உற்சாகமாக உள்ளனர். அதை விட மாடுபிடி வீரர்கள்தான் கால் பூமியில் பாவாத அளவுக்கு உற்சாகத்துடன் காணப்படுகின்றனர்.
இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடைபெறவிருப்பதால் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஜல்லிக்கட்டைக் காண ஆர்வம் காட்டுகின்றனர்.

வெளிநாடு சுற்றுலாப் பயணிகள்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது என்பதால் இங்கு வருடா வருடம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருவார்கள். தமிழக அரசின் சுற்றுலாத்துறையே இவர்களை அழைத்து வரும்.

ஜெர்மனி - பிரான்ஸ்
இந்த ஆண்டும் ஏகப்பட்ட வெளிநாட்டினர் ஜல்லிக்கட்டுக்கு வர முன்பதிவு செய்து வருகின்றனர். இதுவரை ஜெர்மனி, கனடா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர்.

பிசியாக காணப்படும் சுற்றுலா அலுவலகம்
ஜல்லிக்கட்டு நடைபெறப் போகும் தகவல் வந்ததைத் தொடர்ந்து மதுரை சுற்றுலா வளர்ச்சி அலுவலகம் பிசியாகி விட்டது. முன்பதிவுக்காக வெளிநாட்டினர் இங்கு வந்தவண்ணம் உள்ளனராம்.

காளைகள் பிசி
தற்போது ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ள அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் காளைகளைத் தயார்படுத்தும் பணிகள் வேகம் பிடித்துள்ளன. மாடுபிடி வீரர்களும் காளை அடக்கும் பயிற்சிகளில் குதித்துள்ளனர்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications