முன்னாள் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் சஸ்பெண்ட்: அண்ணா பல்கலை பதிவாளர் அதிரடி

அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக கடந்த 2008ம் ஆண்டு ஜூனில் பொறுப்பேற்றவர் மன்னர் ஜவஹர். அவரின் பதவிக் காலம் 2011 ஜூனுடன் முடிந்தபோதும், அவருக்கு ஓராண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. அவரது நீட்டிக்கப்பட்ட பதவிக் காலம் 2012, ஜூன் 26 அன்று முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து அவர் பேராசிரியராக பணி புரிந்து வந்தார்.
இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் 2009 முதல் 2012 வரையிலான கல்வி ஆண்டுகளில் பரீட்சையில் தோல்வி அடைந்த முக்கிய அரசியல் புள்ளிகள் மற்றும் வசதி படைத்தவர்கள் சிலருக்கு மறு மதிப்பீடு செய்து, கூடுதல் மதிப்பெண் வழங்கியதாக புகார் எழுந்தது. இதுபற்றி விசாரிக்க ஓய்வு பெற்ற பேராசிரியர்கள் கஸ்தூரி, ராமையன் முன்னாள் கூடுதல் தொழில் கல்வி இயக்குனர் எட்வின் சந்திரமோனி ஆகியோரை கொண்ட விசாரணை குழு அமைக்கப்பட்டது.
முன்னாள் துணை வேந்தர் மன்னர் ஜவஹர் சொன்னதை கேட்டுதான் முறைகேட்டில் ஈடுபட்டதாக முன்னாள் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி தமிழ்பொறை, சிவக்குமார், மணி ஆனந்த் ஆகியோர் விசாரணைக்குழுவிடம் தெரிவித்தனர். இதையடுத்து 3 பேரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர். மன்னர் ஜவஹரை விசாரிக்க உயர்நிலை குழு அமைக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில், தற்போது மன்னர் ஜவஹர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை பல்கலைக்கழக பதிவாளர் கணேசன் பிறப்பித்துள்ளார். பணியில் இருந்து வியாழக்கிழமை ஓய்வு பெறும் நிலையில் மன்னர் ஜவஹர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மன்னர் ஜவஹர் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கவே அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பதிவாளார் கணேசன் தெரிவித்துள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications