திமுக தொண்டர்கள் என் பக்கம்தான்.. புதிய பரபரப்பைக் கிளப்பும் மு.க.அழகிரி
திமுக தொண்டர்கள் தன் பக்கம் உள்ளதாக மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.
மதுரை: திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர் என்று முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி கூறியுள்ளார்.
தென் மண்டல அமைப்பு செயலாளராக அசைக்க முடியாத இடத்தில் இருந்த மு.க.அழகிரி, திருமங்கலம் இடைத்தேர்தலுக்கென்று ஒரு தனி பார்முலாவையே உருவாக்கினார். இதனையடுத்து கட்சிக்குள் நெருக்கடி காரணமாக நீக்கப்பட்டதையடுத்து, அவர் ஒதுங்கியே இருந்து வருகிறார்.

ஆனாலும் திமுக தலைவர் கருணாநிதியையும் தயாளு அம்மாளையும் அவ்வப்போது சென்று சந்தித்து நலம் விசாரித்து வருகிறார். சில சமயங்களில் திமுக குறித்த தன்னுடைய கருத்துக்களையும் சொல்லி வருகிறார்.
இந்நிலையில் பாலமேடு அருகே தன் ஆதரவாளர் மதுரை வீரன் இல்லத் திருமண விழாவில் அழகிரி கலந்துகொண்டார். அங்கு மணமக்களை ஆசிர்வதித்து உரையாற்றினார். அப்போது அவர் பேசும்போது, " நான் இங்கு வருவதற்காக வரவேற்பு, பேனர்கள், மாலை மரியாதைகள் செய்யும்போது பழைய நினைவெல்லாம் வருகிறது.
திமுகவில் இப்போது இருப்பவர்கள் பதவிக்காகவே உள்ளனர். அவர்கள் கட்சிக்காக உழைக்காதவர்கள். ஆனால் திமுகவின் உண்மையான தொண்டர்கள் என் பக்கமே உள்ளனர். செயல்படாத தலைவர் சென்னையில் உள்ளார். ஆனால், செயல்படுகிற வீரர்கள் இங்குதான் உள்ளனர்."
இவ்வாறு அழகிரி பேசினார்.
மு.க.ஸ்டாலின் குறித்து அழகிரி இவ்வாறு பேசியிருப்பது கட்சிக்குள் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications