சென்னை தூர்தர்ஷன் முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன் காலமானார்
சென்னை: சென்னை தூர்தர்ஷனின் முன்னாள் இயக்குநர் ஏ. நடராஜன் ( வயது 77) இன்று அதிகாலை காலமானார்.
உடல்நலக் குறைவால் கடந்த சில நாட்களாக சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் நடராஜன் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணி அளவில் அவர் காலமானார்.

சென்னை பெருங்குடியில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச் செல்லப்பட்ட உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருக்கிறது. அவரது உடலுக்கு நல்லிகுப்புசாமி செட்டியார் உள்ளிட்ட பல பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
அஞ்சலிக்குப் பின்னர் நாளை காலை 10 மணிக்கு பெசன்ட் நகர் மின்மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
மறைந்த ஏ. நடராஜனுக்கு மனைவி ரமீலா, மகன் செந்தில்குமார், மகள் மாலதி ஆகியோர் உள்ளனர். திருச்சியைச் சேர்ந்த நடராஜன், 1963ஆம் ஆண்டு திருச்சி அகில இந்திய வானொலியில் இணைந்தார். பின்னர் கோயம்புத்தூர் வானொலி நிலையத்தின் இயக்குநரானார். இதன் பின்னர் தூதர்ஷனின் சென்னை மண்டல இயக்குநரானார். அவர் 1996ஆம் ஆண்டு பணி ஓய்வு பெற்றார்.
இருப்பினும் அவரது பணித் திறமையை பாராட்டு மேலும் 2 ஆண்டுகள் பணிநீடிப்பு வழங்கப்பட்டது. தூர்தர்ஷனில் இயக்குநராக பணிபுரிந்த போதும் எழுத்தாளராகவும் இசை ஆர்வலராகவும் திகழ்ந்தவர் ஏ. நடராஜன்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்!












Click it and Unblock the Notifications