தி.மு.க எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் சொத்துக்கள் முடக்கம்!

திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன். இவர் கடந்த 2001-06ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை மற்றும் கால்நடைத்துறை அமைச்சராகவும் பணியாற்றினார்.
அப்போது தனது பெயரிலும், தனது குடும்பத்தினர் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கிடைத்த புகாரின் பேரில் தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் விசாரணை நடத்தி, அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ, அவரது மனைவி ஜெயகாந்தி, சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தன், மகன்கள் அனந்தபத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேசுவரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தூத்துக்குடி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
மேலும் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சொத்துக்களை முடக்க வேண்டும் என்று லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மனு தாக்கல் செய்தனர். அதன்பேரில் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.வின் சுமார் ரூ.2 கோடியே 7 லட்சம் மதிப்பிலான சொத்துக்களை தற்காலிகமாக முடக்கம் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ உள்ளிட்ட 7 பேரும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரி தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி கே.வெங்கடசாமி தள்ளுபடி செய்தார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட்












Click it and Unblock the Notifications