சட்டசபைக்கு தனியாளாக வந்த சி.வி.சண்முகம்! எம்எல்ஏவாக பதவியேற்காமல் மாயமானதால் அதிமுகவில் சலசலப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபை கூட்டத் தொடர் இன்று கூடி எம்எல்ஏக்கள் பதவியேற்பு நடந்து வரும் நிலையில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பெயரை சட்டசபையின் செயலாளர் சீனிவாசன் பதவியேற்க அழைத்தபோது அவரை அவையில் காணவில்லை. சட்டசபைக்கு தனியாளாக வந்த அவர் பதவியேற்காமலேயே சென்றுவிட்டார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

CV Shanmugam

2026 சட்டசபை தேர்தல் முடிந்ததும் தவெக அரசு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டது. நேற்றைய தினம் இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு கூடியது.

அப்போது இடைக்கால சபாநாயகர் கருப்பையா எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்ய அழைத்தார். முதலில் விஜய், பிறகு அவரது அமைச்சரவை பதவியேற்றனர். அதில் அமைச்சர் கீர்த்தனா வெற்றிச் சான்றிதழை கொண்டு வராததால் அவர் பதவியேற்கவில்லை.

இதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர், முன்னாள் முதல்வர்கள், முன்னாள் அமைச்சர்கள் பதவியேற்றனர். இந்த நிலையில் அதிமுகவின் மயிலம் தொகுதி எம்எல்ஏ சி.வி.சண்முகத்தின் பெயரை அழைத்த போது அவர் வரவில்லை. அவையிலும் அவர் இல்லை.

முன்னதாக தமிழக சட்டசபைக்கு அதிமுக எம்எல்ஏக்கள் இரு பிரிவினராக வந்தனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலும், எஸ்பி வேலுமணி தலைமையிலும் வந்தனர். அது போல் சி.வி.சண்முகம் தனியாளாக சட்டசபைக்கு வந்தார்.

மேலும் எடப்பாடி பழனிசாமி பதவியேற்ற போது சிலர் மட்டுமே மேஜையை தட்டி வரவேற்றனர். ஆனால் எஸ்.பி.வேலுமணி எம்எல்ஏவாக பதவியேற்ற போது நிறைய பேர் மேஜையை தட்டி வரவேற்றனர். அதிமுக எம்எல்ஏக்களின் சட்டசபை குழுத் தலைவராக எடப்பாடி பழனிசாமிக்கு பதிலாக எஸ்.பி.வேலுமணியை தேர்வு செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில் சி.வி. சண்முகம் அவையில் இல்லாதது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் அதிமுகவில் ஒரு பெரிய பிரச்சனை வெடிக்கும் என்றே தெரிகிறது. எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தொடர்ந்து தேர்தல்களில் தோல்வியடைந்து வருவதால் அவர் பதவியை ராஜினாமா செய்யக் கோரி சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் கேட்டு வருகிறார்கள்.

ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி மறுப்பு தெரிவிக்கிறாராம். இதனால் 34 எம்எல்ஏக்களுடன் சிவி சண்முகம் கடந்த இரு தினங்களாக ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுகவின் 34 எம்எல்ஏக்களும் தவெகவுக்கு ஆதரவு கொடுத்து அமைச்சரவையில் இடம் பிடிக்க முயற்சித்து வருவதாக சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+