முன்னாள் அமைச்சர் பிரபு அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு
கோவை: கோயம்புத்தூரில் உள்ள காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் பிரபுவின் அலுவலகத்தில் பெற்றோர் குண்டு வீசப்பட்டது பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
கோவை ரேஸ்கோர்சில் முன்னாள் மத்திய அமைச்சர் பிரபு வீடு உள்ளது. இதன் அருகே அலுவலகமும் உள்ளது. அலுவலகத்தில் மகாராஜன் என்ற காவலாளி இரவுப் பணியில் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் இன்று அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு மர்ம மனிதர்கள் பிரபுவின் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பிச்சென்று விட்டனர்.
அந்த பெட்ரோல் குண்டு அலுவலகத்தின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த பூந்தொட்டி அருகே விழுந்து வெடித்து தீப்பிடித்தது. இந்த சம்பவங்கள் எதுவும் அங்கு பணியில் இருந்த காவலாளிக்கு தெரியவில்லை. பிரபு அலுவலகம் எதிரேதான் கோவை மாவட்ட கலெக்டரின் முகாம் அலுவலகம் உள்ளது குறிப்பிடத்தக்கது.
அங்கு காவல் பணியில் இருந்த போலீஸ்காரர் எதேச்சையாக எதிரே பார்த்த போது தீப்பிடித்து எரிவது தெரியவந்தது. உடனே அவர் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.
இந்த சம்பவம் கோவை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications