காமராஜர் காலத்து அமைச்சர் பூவராகவன் மரணம்
சென்னை: பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் அவரது அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் பூவராகவன் இன்று சென்னையில் காலமானார்.
அவருக்கு வயது 86. காமராஜர் ஆட்சிக் காலத்தில் அவரது அமைச்சரவையில், செய்தி மற்றும் மீன்வளத்துறை அமைச்சராக இருந்தவர் பூவராகவன்.
இன்று அதிகாலை அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் திடீரென்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86. இவரது சொந்த ஊர் விருத்தாச்சலம் ஆகும். 1962ம் ஆண்டு விருத்தாச்சலம் தொகுதியிலிருந்து சட்டசபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பூவராகவன், காமராஜர் அமைச்சரவையில் அமைச்சரானார். 1967ம் ஆண்டு வரை அவர் அமைச்சராக இருந்தார்.
பின்னர் கடலூர், மேட்டூர் எம். பி தொகுதிகளில் போட்டியிட்டு 2 முறை எம்.பியாகவும் செயல்பட்டுள்ளார். மாநில காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்து வந்த பூவராகவன் இன்று மரணமடைந்தார்.
பூவராகவன் உடலுக்கு காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர். முன்னாள் அமைச்சரும், பூவராகவனின் நண்பருமான பண்ருட்டி ராமச்சந்திரனும் அஞ்சலி செலுத்தினார்.












Click it and Unblock the Notifications