புதுவை சந்திரகாசு மரணம்.. காரைக்கால் வரலாற்றில் 6 முறை வெற்றி பெற்ற ஒரே தலைவர்!
காரைக்கல் வரலாற்றில் 6 முறை வெற்றி பெற்ற ஒரே வேட்பாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரக்காசு காலமானார்.
புதுச்சேரி: காரைக்கால் மாவட்டத்தில் 6 முறை வென்ற ஒரே வேட்பாளர் என்ற பெருமைக்கு சொந்தக்காரரான புதுச்சேரி முன்னாள் அமைச்சர் சந்திரக்காசு காலமானார். உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 67.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரகாசு. இவர் காரைக்கால் மாவட்டம் நெடுங்காடு தொகுதியில் 6 முறை வெற்றி பெற்றுள்ளார். 1980, 1985, 1990, 1991 என 4 முறை காங்கிரஸ் கட்சியில் வெற்றி பெற்றவர்.

1996ம் ஆண்டில் திமுக வேட்பாளர் மாரிமுத்துவிடம் தோற்று போனார். பிறகு 2001ல் மீண்டும் காங்கிரசில் வெற்றி பெற்றார். 2011ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி என்.ஆர் காங்கிரசில் இணைந்து வெற்றி பெற்றார். மொத்தம் ஆறு முறை வெற்றி பெற்று எம்எல்ஏவாக இருந்துள்ளார்.
காங்கிரஸ் ஆட்சியில் சமூக நல துறை அமைச்சராகவும், என் ஆர் காங்கிரஸ் வேளாண்துறை அமைச்சராகவும் பணியாற்றினார். சந்திரகாசு உடல் நலகுறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மறைந்த முன்னாள் அமைச்சர் சந்திர காசு, தற்போதையை என் ஆர் காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர் பிரியங்காவின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications