தாய்க்கு துரோகம் செய்கிறார் எடப்பாடி பழனிச்சாமி... செந்தில் பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

மதுரை: தாய்க்குத் துரோகம் செய்யும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் செயல்பாடுகள் உள்ளதாக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

நாளை மதுரை அருகே உள்ள மேலூரில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகளைப் பார்வையிட்ட முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில்,

" பொதுச் செயலாளர் சசிகலா தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்தப் பொதுக்கூட்டம் மாநாடு போன்று நடக்க வேண்டும். அதனால் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

உற்சாகம்

உற்சாகம்

இந்தக் கூட்டத்தில் 2 லட்சம் தொண்டர்கள் வரை கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது எங்களுக்கு புது உற்சாகத்தினையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

தாய்க்கு செய்யும் துரோகம்

தாய்க்கு செய்யும் துரோகம்

கூவத்தூரில் சசிகலா மற்றும் தினகரன் கேட்டுக் கொண்டதின் பேரில் எடப்பாடி பழனிச்சாமியை 122 சட்டமன்ற உறுப்பினர்கள் முதல்வர் பதவிக்கு தேர்வு செய்த நிலையில், தற்போது அவரின் செயல்பாடு தாய்க்குச் செய்யும் துரோகம் போன்று உள்ளது. சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அரசைக் கவிழ்க்க வேண்டும் என்று நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த ஓ.பன்னீர்செல்வத்துடன் தற்போது கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் என்ன?

அதிமுக ஒன்றும் நிறுவனம் இல்லை

அதிமுக ஒன்றும் நிறுவனம் இல்லை

27 பேர் கொண்ட குழுவினர் முடிவெடுக்க இது ஒன்றும் குடும்பமோ, நிறுவனமோ இல்லை. ஒன்றரை கோடி தொண்டர்கள் உள்ள கட்சி" என்று தெரிவித்தார்.

கட்சி விழா

கட்சி விழா

இதே போல முன்னாள் அமைச்சர் பழனியப்பனும் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், " எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா இதுவரை அரசு விழாவாகக் கொண்டாடப்பட்ட நிலையில், கட்சி தொண்டர்களின் விருப்பத்திற்கேற்ப கட்சி விழாவாக மேலூரில் கொண்டாடப்பட உள்ளது. இது 6 மாதமாகச் சோர்வாக இருந்த கட்சி தொண்டர்களுக்கு புது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது" என்று தெரிவித்தார்.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
Former Minister Senthil Balaji said, on Chief Minister Edapadi Palanisamy's activities are like treachery to ADMK party.
Please Wait while comments are loading...