வெண்ணிற ஆடை நிர்மலா, குயிலி, விந்தியா… அதிமுக பிரச்சாரத்திற்கு 19 பிரபலங்கள்
ென்னை: நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, சி.ஆர். சரஸ்வதி, குயிலி, விந்தியா உள்ளிட்ட பிரபலங்களுடன் 19 நட்சத்திரங்கள் அதிமுகவிற்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளனர்.
லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு- புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க. தனித்து போட்டியிடுகிறது.
முதல்வர் ஜெயலலிதா சூறாவளி சுற்றுப் பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். அ.தி.மு.க. வேட்பாளர்களும் பிரசாரத்தை தொடங்கிவிட்டனர்.
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து நடிகர், நடிகைகளும் பிரசாரம் செய்கிறார்கள். அவர்களுடைய பெயர் விவரங்களை அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.

ராமராஜன் ரெடி
நடிகர்கள் ராமராஜன், செந்தில், சிங்கமுத்து, குண்டு கல்யாணம், ஆனந்தராஜ், பொன்னம்பலம், ஆகியோர் பிரச்சாரம் செய்கின்றனர்.

பட்டி தொட்டி எங்கும்
சினிமா டைரக்டர் நாஞ்சில் அன்பழகன், கவிஞர் முத்துலிங்கம் ஆகியோர் ஊர் ஊராகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்கிறார்கள்.

வெண்ணிற ஆடை நிர்மலா
நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, சி.ஆர். சரஸ்வதி, குயிலி, விந்தியா, திரைப்பாடகி டி.கே.கலா ஆகியோர் பிரசாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி
இவர்களுடன் டி.வி. செய்தி வாசிப்பாளர்கள் பாத்திமா பாபு, நிர்மலா பெரியசாமி, நாட்டுப்புறப் பாடல் பாடகி அனிதா குப்புசாமி ஆகியோரும் அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறார்கள்.

சுற்று பயண விபரம்
அ.தி.மு.க. வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்யும் நடிகர், நடிகைகளின் சுற்றுப் பயண விவரம் தயாரிக்கப்பட்டுள்ளது. அதன்படி தமிழ் நாடு முழுவதும் சென்று பிரசாரம் செய்கிறார்கள்.

தேர்தல் பணிக்குழு ஒத்துழைப்பு
அனைவரும் முழுமையாக தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடுவார்கள். அதற்கு தேவையான ஏற்பாடுகளை சம்பந்தப்பட்ட தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் செய்ய வேண்டும் என்று அதிமுக தலைமை கழகம் கேட்டுக் கொண்டுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications