For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

முன்னாள் டிஜிபி ஸ்ரீபால் மரணம்!

Google Oneindia Tamil News

Former Tamil Nadu DGP Sripal dead
சென்னை: தமிழக முன்னாள் டிஜிபி எஸ். ஸ்ரீபால் இன்று மரணமடைந்தார்.

அவருக்கு வயது 76 ஆகும். உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

இவருக்கு மனைவியும், 2 மகள்களும் உள்ளனர். இன்று காலை ஸ்ரீபாலுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக அவரை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் ஸ்ரீபால்.

அவரது மனைவி கமலி அப்போது உடன் இருந்தார். கோகுலம் கதிர் பத்திரிக்கையின் ஆசிரியராக இருக்கிறார் கமலி ஸ்ரீபால் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பாண்டி பஜாரில் உள்ள இல்லத்திற்கு ஸ்ரீபால் உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அவரது மகள்கள் இருவரும் அமெரிக்காவில் உள்ளனர். இருவரும் வந்த பின்னர் இறுதிச் சடங்குகள் நடைபெறும்.

1980 முதல் 85 வரை சென்னை மாநகர காவல்துறை ஆணையராக இருந்துள்ளார் ஸ்ரீபால். பின்னர் 1991 முதல் 95 வரை டிஜிபியாக இருந்தார்.

ஆட்டோ சங்கர் வழக்கு, சில குண்டு வெடிப்பு வழக்குகள், பிரேமானந்தா சாமியார் வழக்கு ஆகியவை இவர் டிஜிபியாக இருந்த சமயத்தில்தான் தீர்வு காணப்பட்டன.

English summary
Former Tamil Nadu director general of police S Sripall died at a private hospital in Chennai on Tuesday. He was 76 and is survived by his wife and two daughters. Sripall complained of chest pain on Tuesday morning and was rushed to a private hospital at Nungambakkam, where he died without responding to treatment. His wife Kamali was with him when he died. Kamali is the editor of the 'Gokulam Kathir,' a Tamil magazine. Sripall's body was taken to his house at Pondy Bazaar. Family sources said his body would be cremated after his daughters, who are in the US, reached Chennai.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X