கேரள முதல்வரை கண்டித்து பெரியாறு அணை மீட்புக் குழுவினர், விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தேனி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பெரியாறு அணை மீட்புக் குழுவினர், வழக்கறிஞர் சங்கம், மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கத்தினர் லோயர்கேம்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
முல்லைப் பெரியாறு அணையில் தற்போது நீர்மட்டம் 141.65 அடியாக உள்ளது. அணையின் நீர்மட்டம் உயரத் தொடங்கிய நாளிலிருந்தே கேரள முதல்வர் உம்மண் சாண்டி அணை குறித்து தேவை இல்லாத கருத்துகளை தெரிவித்து மக்களை குழப்பி வருகிறார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அணையின் பலம் குறித்து ஆய்வு செய்து உச்சநீதிமன்றம் 142 அடி தண்ணீர் தேக்த தீர்ப்புக்கூறிய பின்னும் அணை பலவீனமடைந்துள்ளது என்று கூறும் கேரள முதல்வர் மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரக்கோரியும், அணை பாதுகாப்பில் உள்ள கேரள போலீஸாரை மாற்றி மத்திய பாதுகாப்பு படையை நிறுவ வேண்டும், அணை பராமரிப்பு பணி மேற்கொள்ள முடியாத நிலையில் உள்ளதால், பெரியாறு அணைக்கென தனியாக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டு அவர் கண்காணிப்பில் பராமரிப்பு பணிகள் செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் பெரியாறு அணை மீட்புக்குழுவினர், வழக்கறிஞர் சங்கத்தினர், கூடலூர் அனைத்து விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட அமைப்பினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு லோயர்கேம்பில் உத்தமபாளையம் டிஎஸ்பி கண்ணன் தலைமையில் ஏராளமான போலீஸார்கள் குவிக்கப்பட்டிருந்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications