"குடி" தேர்தலையும் கெடுக்கும்.. ஸோ, 4 நாட்களுக்கு டாஸ்மாக் லீவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சட்டசபைத் தேர்தலையொட்டி டாஸ்மாக் மதுக்கடைகளுக்கு நான்கு நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாதம் 16ம் தேதி தமிழக சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், சட்டசபைத் தேர்தலையொட்டி தமிழகத்தில் மே 14ம் தேதி முதல், வாக்குப்பதிவு நடைபெறும் 16ம் தேதி வரை மூன்று தினங்களும், பின்னர் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் 19ம் தேதியும் நாடுமுழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட நாட்களில் டாஸ்மாக் கடைகளை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications