தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் 4 பேர் பலி.. மேலும் பலருக்கு தீவிர சிகிச்சை.. என்ன நடந்தது?
தென்காசி: தென்காசி அருகே முதியோர் இல்லத்தில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு 3 முதியவர்கள் பலியாகியிருந்த நிலையில் இன்று காலை மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம், சுந்தரபாண்டியபுரம் பகுதியில் அன்னை முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இதில் 60க்கும் மேற்பட்ட முதியவர்கள், ஆதரவற்றோர் தங்கியுள்ளனர். இந்த முதியோர் இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு உணவருந்திய சிலருக்கு ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர்கள் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

முதற்கட்டமாக 11 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சூழலில், நேற்று 3 பேர் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தனர். செங்கோட்டை பகுதியை சேர்ந்த சங்கர் கணேஷ் (வயது 48), முருகம்மாள் (வயது 45), சொக்கம்பட்டி பகுதியை சேர்ந்த அம்பிகா (வயது 40) ஆகிய 3 பேர் உயிரிழந்தனர் என்பது தெரியவந்தது. மற்றவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே, தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், மாவட்ட சுகாதார அலுவலர் கோவிந்தன், மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் புஷ்பராஜ் மற்றும் மருத்துவர்கள் முதியோர் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் இந்த காப்பகத்துக்கு சீல் வைக்கப்பட்டது.
தொடர்ந்து, அந்த முதியோர் காப்பகத்தில் இருந்த மாற்றுத்திறனாளிகள், பார்வைத்திறன் குறைவுடையோர் உட்பட 14 ஆண்கள், 24 பெண்கள் உள்பட 42 பேர், ஐந்துக்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் மூலம் தென்காசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.
சுந்தரபாண்டியபுரத்தில் இந்த முதியோர் இல்லம் கடந்த 8 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், பாட்டா குறிச்சியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் இந்த முதியோர் இல்லத்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காப்பக நிர்வாகி ராஜேந்திரனை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தனலட்சுமி (70) என்பவர் இன்று காலை உயிரிழந்தார். இதன்மூலம், உயிரிழந்தோர் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 55 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல்












Click it and Unblock the Notifications