சிறுநீர் கழிக்கப் போன மாற்றுத்திறனாளியை ஆடு திருடன் என்று தாக்கிய 4 பேர்- கைது!
முசிறி: முசிறியில் இரவு நேரத்தில் வயல்வெளியில் நடந்து சென்று கொண்டிருந்த மாற்றுத்திறனாளி ஒருவரை ஆடு திருடன் என்று 4 பேர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வாலிபரை தாக்கிய 4 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முசிறி அருகே தும்பலம் கிராமத்தில் வசிப்பவர் பாலகுமார். இவர் ஒரு கை மற்றும் ஒரு கால் செயல்படாத மாற்றுத்திறனாளி ஆவார்.
இயற்கை உபாதை:
கடந்த மூன்றாம் தேதி இரவு தும்பலத்தில் உள்ள வங்கியின் பின்புறம் வயல்வெளியில் இயற்கை உபாதையை கழிக்க இருட்டான பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.
அடித்து உதைத்த ஊர்க்காரர்கள்:
அப்போது அங்கு வந்த அதே ஊரை சேர்ந்த நடராஜன் , மணி , மனோகரன் மற்றும் சேகர் ஆகியோர் பாலகுமாரை ஆடு திருட வந்ததாக நினைத்து அசிங்கமாக திட்டியும், அடித்து உதைத்துள்ளனர்.
மருத்துவமனையில் சிகிச்சை:
இதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட பால குமார் முசிறி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்.
நான்கு பேர் கைது:
இது பற்றி பாலகுமார் முசிறி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் பாலகுமாரை தாக்கிய நான்கு பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
ஆடு திருடனாக நினைத்து தாக்குதல்:
ஊனமுற்ற இளைஞரை ஆடு திருட வந்ததாக நினைத்து தாக்கிய சம்பவம் அந்த கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications