மாஞ்சாநூல் பட்டம் பறக்கவிட்டவர்களை பிடிக்க 4 தனிப்படை.. கடைகளிலும் போலீஸ் ரெய்டு
சென்னை அனகாபுத்தூர் பகுதியில் மாஞ்சா நூல் பட்டம் பறக்கவிட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை: அனகாபுத்தூர் பகுதியில் மாஞ்சா நூல் அறுத்து இளைஞர் உயிரிழந்ததையடுத்து மாஞ்சாநூல் பட்டம் பறக்கவிட்டவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளனர். அனகாபுத்தூர் பகுதியில் மாஞ்சா நூல் விற்கப்படுகிறதா என்றும் போலீசார் கடைகளில் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த சிவப்பிரகாசம் என்பவர் நேற்று தனது தந்தையுடன் சேலையூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். தாம்பரம் - அனகாபுத்தூர் இருகே சென்றபோது சாலையின் குறுக்கே கிடந்த மாஞ்சா நூல் சிவப்பிரகாசத்தின் கழுத்தை பதம் பார்த்தது. இதில் இரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

படுகாயமடைந்த அடைந்த அவரது தந்தை சந்திரசேகர் மருத்துவமனயில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் மாஞ்சாநூல் பட்டம் பறக்கவிட்டர்களை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அனாகபுத்தூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கடைகளில் மாஞ்சாநூல் விற்கப்படுகிறதா என போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னையில் மாஞ்சா நூல் விற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் மாஞ்சா நூல் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு அப்பாவி பொதுமக்கள் பலியாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications