எர்ணாகுளம், வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
சென்னை: சென்னை சென்ட்ரலில் இருந்து எர்ணாகுளம், ஹெளரா, திருநெல்வேலில் இருந்து எழும்பூர், எர்ணாகுளத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை சென்ட்ரல் - எர்ணாகுளம் சிறப்பு ரயில்
ரயில் எண் 06005: ஏப்ரல் 29-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.30 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.45 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.

ரயில் எண் 06006: மே 1-ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 7 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.15 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இந்த ரயில் அரக்கோணம், காட்பாடி, ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, ஒட்டப்பள்ளம், திருச்சூர், ஆலுவா ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு ரயில்
ரயில் எண் 06002: மே 1-ஆம் தேதி திருநெல்வேலியில் இருந்து பிற்பகல் 2.45 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த ரயில் வாஞ்சி மணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, கொடைக்கானல் சாலை, திண்டுக்கல், திருச்சி, விருதாசலம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், மாம்பலம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரல் - ஹெளரா குளிர்சாதன சிறப்பு ரயில்
ரயில் எண் 00842: ஏப்ரல் 17-ஆம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 5.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் மாலை 6.30 மணிக்கு ஹெளரா சென்றடையும்.
இந்த ரயில் நெல்லூர், விஜயவாடா, ராஜமுந்தரி, துவ்வாடா, விசாகப்பட்டினம், பிரம்மபூர், குர்தா சாலை, புவனேசுவரம், கட்டாக், பாத்ரக், காரக்பூர் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
எர்ணாகுளம் - வேளாங்கண்ணி சிறப்பு ரயில்
ரயில் எண் 06016: ஏப்ரல் 14-ஆம் தேதி எர்ணாகுளத்தில் இருந்து இரவு 8.10 மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 9.30 மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.
ரயில் எண் 06015: ஏப்ரல் 15-ஆம் தேதி வேளாங்கண்ணியில் இருந்து பிற்பகல் 2.20 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4.15 மணிக்கு எர்ணாகுளம் சென்றடையும்.
இந்த ரயில் ஆலுவா, திருச்சூர், ஒட்டப்பள்ளம், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ரயில் நிலையங்களில் நின்றுச் செல்லும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications