தமிழகத்தில் ஐஎஸ் இயக்க ஸ்லீப்பர் செல்கள்? 4 பேர் கைது செய்யப்பட்டதால் பதற்றம்
சென்னை: ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்னிந்தியாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஸ்லீப்பர் செல்களாக ஊடுருவி உள்ளனரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சிரியா மற்றும் ஈராக்கில் கணிசமான பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஐஎஸ் அமைப்பினர், பல்வேறு உலக நாடுகளில் தொடர்ந்து தாக்குதலை அரங்கேற்றி வருகின்றனர். இந்த இயக்கத்துக்காக உலக நாடுகளில் ஆள்சேர்ப்பு நடவடிக்கைகளும் நடந்து வருகிறது. இந்த அமைப்பில் சேர்வதற்காக இந்தியாவில் இருந்தும் ஏராளமான இளைஞர்கள் சென்றுள்ளனர். மேலும் பலர் இங்கேயே இருந்து கொண்டு அந்த அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாகவும் கண்டறியப்பட்டு உள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட உளவுத்துறை தகவல்படி, இந்தியாவில் 150 இளைஞர்கள் ஐஎஸ் இயக்கத்தின் ஆதரவாளர்களாக செயல்படுவதாக கண்டறியப்பட்டது. இதில் பெரும்பாலானோர் தென்னிந்தியாவை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டு இருந்தது. எனவே அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை தேசிய புலனாய்வுத்துறை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் தொடங்கினர்.
கடந்த ஜனவரி மாதம் குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு தொடக்கத்தில் நாடு முழுவதும் அவர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் 14 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்தும் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று சந்தேகத்தின் பெயரில் கைது நடவடிக்கை நடைபெற்றது.
-
தவெக அருண்ராஜ் படத்துடன்.. வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய இருந்த சில்வர் பாத்திரங்கள் பறிமுதல்! -
என்னது துணை முதலமைச்சர் பதவி தராங்களா.. விஜய் தான் முதலமைச்சர்.. செங்கோட்டையன் தடாலடி -
அமெரிக்க கடற்படை உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்தது.. ஏன் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாக்க முடியவில்லை? -
கொட்டிய ஆலங்கட்டி மழை.. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஐஸ் மழை பெய்ததால் மக்கள் மகிழ்ச்சி! -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
Annamalai: 80 சீட்+ துணை முதல்வர் பதவி? பாஜக கூட்டணிக்கு விஜய் வருகிறாரா? அண்ணாமலை கொடுத்த விளக்கம் -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி!












Click it and Unblock the Notifications