ஈரோடில் சாதாரண செம்பு பாத்திரத்தை இரிடியம் என கூறி விற்க முயன்ற 5 பேர் அதிரடி கைது
செம்பு பாத்திரத்தை இரிடியம் என கூறி விற்க முயன்றவர்கள் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

ஈரோடு: சாதாரண செம்பு பாத்திரத்தை இரிடியம் என கூறி விற்பனை செய்ய முயன்ற வார இதழ் செய்தியாளர் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் ஈரோட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோட்டை சேர்ந்த சிட்டிபாபு சிங்கிடம் 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று தங்களிடம் இரிடியம் இருப்பதாகவும் அதனை வீட்டில் வைத்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்று கூறியுள்ளனர்.

இவர்களது நடவடிக்கையில் சந்தேகமடைந்த அவர் ஈரோடு வீரப்பன்சத்திரம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் செம்பு பாத்திரத்தை இரிடியம் என விற்பனை செய்ய முயற்சித்ததாக ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த பாரதிராஜா, அவிநாசியை சேர்ந்த முத்துராமலிங்கம் சத்தியமங்கலத்தை சேர்ந்த கோவிந்தராஜ், திருச்செந்தூர் விஜயன், கன்னியாகுமரி செல்வராஜ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
மேலும் அவர்களிடமிருந்து மோசடிக்கு பயன்படுத்திய செம்பு பாத்திரம் மற்றும் இருசக்கர வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 5 பேரும் தீவிர விசாரணைக்கு பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் பாரதிராஜா போலீஸ் பார்வை என்ற வார இதழில் செய்தியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications