கொடைக்கானல் டூர் போறீங்களா? இதான் சரியான நேரம்.. சுற்றுலா இடங்களுக்குச் செல்ல 2 நாட்களுக்கு இலவசம்!
திண்டுக்கல்: கொடைக்கானலில் இன்றும் (மே 2), நாளையும் (மே 3) வனத்துறை சுற்றுலா இடங்களை இலவசமாக சுற்றிப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தூண் பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய இடங்களுக்கு கட்டணமின்றி செல்லலாம்.
கோடை காலம் தொடங்கியதால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வர தொடங்கியுள்ளனர். குளிர்ச்சியான காலநிலை, பசுமையான காடுகள், அழகிய இயற்கை காட்சிகளால் சுற்றுலா பயணிகளை கொடைக்கானல் கவர்ந்து வருகிறது. கோடை காலத்தில் வெப்பத்தில் இருந்து தப்பிக்க மக்கள் அதிகமாக இங்கு வருகை தருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள அனைத்து வனத்துறை சுற்றுலா இடங்களுக்கும் ஒரே இடத்தில் 'க்யூஆர்' கோடு மூலம் நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையால் பசுமை பள்ளத்தாக்கு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், வனத்துறை சுற்றுலா இடங்களுக்கு அந்தந்த இடத்திலேயே தனியாக நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும் என வலியுறுத்தி, வெள்ளிக்கிழமை காலை முதல் கொடைக்கானலில் உள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இன்றும் (மே 2), நாளையும் (மே 3) வனத்துறை சுற்றுலா இடங்களை இலவசமாக சுற்றி பார்க்கலாம் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் அறிவித்துள்ளார். தூண்பாறை, குணா குகை, பைன் மரக்காடுகள் மற்றும் மோயர் சதுக்கம் போன்ற இடங்களுக்கு எந்த கட்டணமும் இல்லாமல் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன் கூறுகையில், "கொடைக்கானலில் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு மே 2 மற்றும் மே 3 ஆகிய 2 நாட்களும் கட்டணமின்றி இலவசமாக சுற்றி பார்க்கலாம்.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக, வனத்துறை சுற்றுலா இடங்களுக்கான நுழைவு சீட்டு, கொடைக்கானல் பேருந்து நிலையம், பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட 5 இடங்களில் வனத்துறை மூலம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 'க்யூஆர்' குறியீடு மூலம் வரிசையில் நிற்காமல் உடனடியாக டிக்கெட் பெறும் நடைமுறை மே 4 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும்." என்று தெரிவித்துள்ளார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications