இந்த முறையும் மக்களை விட்டு வைக்காத "இலவச" நோய்... விடாமல் துரத்தும் கட்சிகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இலவசங்கள் மக்களை அடிமைப்படுத்துகின்றன என்ற குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையிலும் அதைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் கட்சிகள் குறிப்பாக திராவிடக் கட்சிகள் இலவசங்களை அறிவித்து மக்களின் உணர்வுகளை மதிக்காத வகையில் நடந்து கொண்டிருப்பது ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் உள்ளது.

அதிமுக மட்டுமல்லாமல் திமுகவும் கூட தனது தேர்தல் அறிக்கையில் இலவச அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. அதேபோல பாமகவும் இலவசங்களை அறிவித்துள்ளது.

பாஜகவும் தான் ஆட்சிக்கு வந்தால் ஏழைப் பெண்களுக்கு எட்டு கிராம் தங்கம் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளது.

அதிமுக இலவசம்... தாறுமாறு

அதிமுக இலவசம்... தாறுமாறு

இதில் இலவச அறிவிப்புகளை வெளியிடுவதில் மற்றவர்களை அதிமுக மிஞ்சி விட்டது. சாத்தியமே இல்லாத பல திட்டங்களையும் அக்கட்சி அள்ளி விட்டுள்ளது.

என்னென்ன பாருங்கள்

என்னென்ன பாருங்கள்

இலவச செலபோன், பெண்கள் மொபெட் வங்க 50 சதவீத மானியம், ரேஷன் கார்டுகளுக்கு ரூ. 500 இலவச கூப்பன், பள்ளி மாணவர்களுக்கு இலவச லேப்டாப், விவசாயக் கடன் தள்ளுபடி, 100 யூனிட் வரை மின்கட்டணம் ரத்து, இலவச செட்டாப் பாக்ஸ், இலவச ஆடு மாடு திட்டம்.. என லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.

திமுகவின் திட்டங்கள்

திமுகவின் திட்டங்கள்

திமுக அளித்துள்ள இலவச அறிவிப்புகள்- ஏழைகளுக்கு ஸ்மார்ட் போன், மாணவர்களுக்கு இலவசமாக 3ஜி4ஜி இணையதள இணைப்பு, இலவச லேப்டாப், டேப்லெட், மாதத்திற்கு 10 ஜிபி இலவச டவுன்லோட் வசதி. மாதந்தோறும் ரேஷன் கடைகளில் 20 கிலோ இலவச அரிசி, பயிர்க்கடன், கல்விக் கடன் ரத்து, ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 7 குறைப்பது என்று லிஸ்ட் போகிறது.

பாஜகவின் திட்டம்

பாஜகவின் திட்டம்

பாஜகவும் பல இலவசத் திட்டங்களை அறிவித்துள்ளது. அதில் கவர்ச்சிகரமானது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள பெண்களுக்கு எட்டு கிராம் இலவசத் தங்கம்.

பாமக

பாமக

பாமகவும் பல இலவசங்களை அறிவித்துள்ளது அதில் சென்னையில் இலவச பஸ் பயணம் என்பது முக்கியமானது.

இன்னும் எத்தனை காலம்தான்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+