Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிறந்த நண்பர்கள் "தேவாவும், சூர்யா"வும்தான்.. ஒன்இந்தியா வாசகர்களின் தீர்ப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நண்பர்கள் தினத்தை மக்கள் நேற்றுதான் கொண்டாடி முடித்துள்ளனர். இன்னும் கூட பலர் தங்களது நட்புகளை சமூக வலைதளங்களில் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

நண்பர்கள் தினத்தையொட்டி சினிமாவில் உங்களைக் கவர்ந்த நட்பு ஜோடி எது என்று கேட்டிருந்தோம். வரவேற்பு பலமாகவே இருந்தது.

அதில் சூப்பர் ஸ்டார் ரஜினியும், மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியும்தான் மிகச் சிறந்த நட்பு ஜோடி என்று ஒன்இந்தியா - தமிழ் வாசகர்கள் ஏகோபித்த தீர்ப்பை அளித்துள்ளனர்.

உங்கள் பார்வையில் யார் சிறந்த திரை நண்பர்கள்

உங்கள் பார்வையில் யார் சிறந்த திரை நண்பர்கள்

இதுதான் நாம் கேட்டிருந்த கேள்வி. இதற்குக் கிடைத்த வரவேற்பு கிட்டத்தட்ட 14,000 வாக்குகள்.

ராக்கம்மா கையைத் தட்டு

ராக்கம்மா கையைத் தட்டு

முதலிடத்தைப் பிடித்து சிறந்த திரை நட்பு ஜோடி என்ற பெயரைப் பெற்றுள்ளவர்கள் தளபதி படத்தில் சூர்யாவாக நடித்த ரஜினியும், தேவாவாக நடித்த மம்முட்டியும்தான். இவர்களுக்குக் கிடைத்த வாக்குகள் 4110 ஆகும். அதாவது 30.16 சதவீத வாக்குகளை இவர்கள் பெற்றுள்ளனர்.

நினைத்தாலே இனிக்கும்

நினைத்தாலே இனிக்கும்

2வது இடம் ரஜினிக்கும், கமலுக்கும் கிடைத்துள்ளது. பல படங்களில் இணைந்து அசத்தியுள்ள இந்த ஜோடியின் நினைத்தாலே இனிக்கும் படத்திற்காக 2வது இடம் கிடைத்துள்ளது. மொத்த வாக்குகள் 2130 ஆகும். அதாவது 15.63 சதவீதமாகும்.

நண்பேன்டா

நண்பேன்டா

3வது இடம் நண்பேன்டா என்ற வசனத்தை பிரபலமாக்கிய பாஸ் என்கிற பாஸ்கரன் பட ஜோடி ஆர்யா - சந்தானத்திற்குக் கிடைத்துள்ளது. கிடைத்த வாக்குகள் 1555 ஆகும். அதாவது 11.41 சதவீதமாகும்.

மரண பயத்தைக் காட்டிண்டா பரமா

மரண பயத்தைக் காட்டிண்டா பரமா

4வது இடத்தி்ல் சுப்பிரமணியபுரம் சசிக்குமார் - ஜெய் ஜோடி வருகிறார்கள். இவர்களுக்கு 1454 வாக்குகள் கிடைத்துள்ளன. வாக்கு சதவீதம் 10.67 ஆகும்.

என்ன சித்தா...!

என்ன சித்தா...!

பிதாமகன் விக்ரமும், சூர்யாவும் 5வது இடத்தில் வருகிறார்கள். இவர்களுக்கு 7.85 சதவீத வாக்குகள், அதாவது 1070 வாக்குகள் கிடைத்துள்ளன.

மீசைக்கார நண்பா

மீசைக்கார நண்பா

நட்புக்காக படத்தில் இணை பிரியாத நண்பர்களாக நடித்த சரத்குமாரும், விஜயக்குமாரும் வருகிறார்கள். இவர்களுக்கு 6.41 சதவீத வாக்குகள் அதாவது 874 வாக்குகள் கிடைத்துள்ளன.

நாய்க்கரே...!

நாய்க்கரே...!

அடுத்த இடம் வேலு நாய்க்கராக கமல்ஹாசன் அசத்திய நாயகன் பட நட்பு ஜோடியான கமல் - ஜனகராஜுக்குக் கிடைத்துள்ளது. இந்த ஜோடிக்கு 694 வாக்குகள், அதாவது 5.09 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

3 இடியட்ஸ்

3 இடியட்ஸ்

8வது இடத்தில் நண்பன் பட ஜோடியான விஜய்- ஜீவா- ஸ்ரீகாந்த் வருகிறது. இந்த ஜோடிக்கு 690 வாக்குகள், அதாவது 5.06 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

ல்தகா சைஆ

ல்தகா சைஆ

9வது இடம் பிரண்ட்ஸ் பட ஜோடி விஜய் - சூர்யா. இந்த ஜோடிக்கு 622 வாக்ககுகள், அதாவது 4.56 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

ஒரு தடவை சொன்னா

ஒரு தடவை சொன்னா

10வது இடத்தில் பாட்ஷா வருகிறார். ரஜினி - ஜனகராஜுக்கு 2.12 சதவீத வாக்குகள், அதாவது 289 வாக்குகள் கிடைத்துள்ளன. இந்த ஜோடி பல படங்களில் பட்டையைக் கிளப்பியுள்ளது என்பது நினைவிருக்கலாம்.

3க்கு 11

3க்கு 11

11வது இடம், அதாவது கடைசி இடத்தில் 3 பட நட்பு ஜோடி தனுஷ், சிவகார்த்திகேயன் வருகிறார்கள். இவர்களுக்கு 138 வாக்குகள், அதாவது 1.01 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன.

எந்த இடத்தில் வந்தால் என்ன.. நட்புக்கு எப்போதுமே முதலிடம்தான்!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+