செமையா இருக்கு சார் கிளைமேட்.. 1ம் தேதி முதல் கனமழை பெய்யப் போகுதாம்!
வடகிழக்குப் பருவமழையால் வரும் ஒன்றாம் தேதி முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: வடகிழக்குப் பருவமழையால் வரும் ஒன்றாம் தேதி முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எதிர்ப்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால் கடுமையான வறட்சி ஏற்பட்டது.
ஆனால் தென் மேற்பருவ மழை கைகொடுத்ததால் குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனைகளை சமாளிக்க முடிந்தது. தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இயல்பைவிட அதிகம் பெய்ததால் தமிழக நீர் ஆதாரங்கள் நிரம்பி வழிகின்றன.

இயல்பைவிட அதிக மழை பெய்யும்
இந்நிலையில் தமிழகத்திற்கு அதிக மழையை கொடுக்கும வடகிழக்குப் பருவமழை தொடங்கியுள்ளது. பருவமழை ஒரு வாரம் தாமதமாக தொடங்கினாலும் பருவமழை இயல்பைவிட அதிகம் பெய்யும் என கூறப்படுகிறது.

மேலடுக்கு சுழற்சி
வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்துவருகிறது. இந்நிலையில் தென்மேற்கு வங்க கடலில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

ஓரிரு இடங்களில் கனமழை
இதனால் இன்று தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் தமிழகம் மற்றும் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

1ஆம் தேதிக்குப் பிறகு கனமழை
சென்னையில் விட்டு, விட்டு மிதமான மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பருவத்தில் வட கிழக்கு பருவமழை இயல்பான அளவு இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வடகிழக்குப் பருவமழையால் வரும் ஒன்றாம் தேதிக்குப் பிறகு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்யும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வதந்திகளை நம்ப வேண்டாம்
மேலும் கனமழை பெய்யும் என்பதை 4 அல்லது 5 நாட்களுக்கு முன்பாகதான் கணிக்க முடியும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார். ஆகையால் புயல் வெள்ளத்தால் சென்னை மூழ்கும் என்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.
-
50% அல்லது 69%? உச்ச நீதிமன்றத்தில் நாளை தமிழகத்தின் இட ஒதுக்கீடு சட்டப் போர்! பின்னணி என்ன தெரியுமா -
ஹனிமூன் பீரியட் எங்கே? ஸ்டாலின் போல விஜய் அதிர்ஷ்டசாலி இல்லை! சிக்கலாகும் மின்சாரம், சட்டம் ஒழுங்கு? -
ஐபிஎஸ் டிரான்ஸ்ஃபர்! காத்திருப்போர் பட்டியலில் இருந்த அருண் IPS-க்கு சூப்பர் பதவி கொடுத்த விஜய் -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
இடைத்தேர்தலில் மீண்டும் மதுராந்தகம் தொகுதியில் போட்டியிடுவீர்களா? மரகதம் குமரவேல் ரியாக்ஷன் என்ன? -
திரையரங்குகளில் 5 காட்சிகளுக்கு அனுமதி! முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு! திரை துறையினர் ஹேப்பி! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து?












Click it and Unblock the Notifications