அக்டோபர் 1 முதல் அப்பல்லோவில் இருந்த ஜெ.வை பார்க்க சசிகலாவுக்கே அனுமதி இல்லை- தினகரன்
அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அப்பல்லோவில் இருந்த ஜெயலலிதாவை பார்ப்பதற்கு எனது சித்தி சசிகலாவையே அனுமதிக்கவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
கூர்க்: கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் அப்பல்லோவில் இருந்த ஜெயலலிதாவை பார்க்க சசிகலாவை கூட மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
அதிமுகவில் எடப்பாடி தரப்புக்கும், தினகரன் தரப்புக்கும் இடையே முட்டல் மோதல்கள் அதிகரித்துள்ளதை தொடர்ந்து இருதரப்பைச் சேர்ந்தவர்களும் மாறி மாறி ஒருவரை ஒருவர் தரக்குறைவாக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா பொதுக் கூட்டங்களில் பேசி வரும் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறுகையில், ஜெயலலிதா சசிகலா குடும்பத்தினரால் கொல்லப்பட்டு விட்டார். ஜெயலலிதா இட்லியும் சாப்பிடவில்லை, எதையும் சாப்பிடவில்லை.
ஜெயலலிதாவை பார்த்தால் அவர் கொல்லப்படும் ரகசியத்தை கூறிவிடுவார் என்பதால் அவரை பார்ப்பதற்கு சசிகலா குடும்பத்தினர் யாரையும் அனுமதிக்கவில்லை. சசிகலா குடும்பத்தினர் கூறியதைதான் அமைச்சர்களாகிய நாங்கள் கூறினோம். பொய் கூறியதற்காக எங்களை மன்னித்துவிடுங்கள் என்று கூறியிருந்தார்.
இதுகுறித்து கூர்கில் டிடிவி தினகரன் கூறுகையில், திண்டுக்கல் சீனிவாசன் இன்று பதவி கிடைத்து விட்ட சுகத்தில் ஏதேதோ பேசி வருகிறார். ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது எடுக்கப்பட்ட வீடியோ என்னிடம் உள்ளது. சசிகலா சரி என்று கூறினால் நான் வெளியிட தயார்.
ஜெயலலிதாவை சந்தித்தால் நோய்தொற்று ஏற்படும் என்றால் சசிகலாவுக்கு மட்டும் ஏற்படாதா என்று அமைச்சர்கள் கேள்வி எழுப்புகின்றனர். உண்மையை சொல்ல போனால், ஜெயலலிதாவை சந்திக்க எனது சித்தி சசிகலாவையே கடந்த ஆண்டு அக்டோபர் 1-ஆம் தேதி முதல் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை என்றார் அவர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications