இன்று முதல் "பறக்கும்" ஜெ... விருத்தாச்சலத்தில் ரோடாக, ஹெலிபேடாக மாறிய 50 ஏக்கர் வயல்கள்!
விருத்தாச்சலம்: தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா இன்று விருத்தாசலத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உள்ளார். இதற்காக சுமார் 50 ஏக்கர் விளை நிலங்களில் தார் சாலை மற்றும் ஹெலிபேட் அமைத்துள்ளதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பு செய்து விட்டு அவ்வப்போது மாற்றிய ஜெயலலிதா தற்போது பிரச்சாரத்திற்கு கிளம்பிவிட்டார். சென்னையில் சொகுசு வேனில் பிரச்சாரம் செய்த ஜெயலலிதா இன்று முதல் ஹெலிகாப்டரில் பறந்து பறந்து பிரச்சாரம் செய்யப்போகிறார்.
விருத்தகிரீஸ்வரர் கோயிலை நோக்கி வாஸ்துபடி அமைக்கப்பட்டுள்ள மேடையில் இன்று பிரச்சாரம் செய்யும் ஜெயலலிதா, இன்று வேட்பாளர்களை

ஜெயலலிதா பிரச்சாரம்
சென்னையில் சனிக்கிழமையன்று வேட்பாளர்களை அறிமுகம் செய்து பிரச்சாரம் செய்த ஜெயலலிதா, இன்று விருத்தாசலத்தில் 15 வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார். இதற்காக விருத்தாசலம் - சேலம் புறவழிச் சாலையில் 50 ஏக்கர் விளைநிலம் தயார் செய்யப்பட்டுள்ளது. பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

போலீஸ் பாதுகாப்பு
இதற்காக 3 ஆயிரத்திற்கும் அதிகமான காவலர்கள் விருத்தாசலத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். கருவேப்பில்லைக்குறிச்சி என்ற இடத்தில் மேடை ஹெலிக்காப்டர் இறங்கும் தளம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்கூட்ட மேடையைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

விளை நிலத்தில் ஹெலிபேட்
மேடையிலிருந்து 350 மீட்டர் தொலைவில் ஹெலிபேட் அமைக்கப்பட்டுள்ளது. ஹெலிபேடிலிருந்து மேடை நோக்கி காரில் செல்லும் முதல்வர் ஜெயலலிதாவுக்காக விளை நிலத்தில் தார் சாலை அமைக் கப்பட்டுள்ளது. மேலும் விவசாய நிலங்கள் முழுவதும் அதிமுக கொடிகள் அமைக்கப்பட்டிருப்பதோடு, குளிர்சாதன வசதியுடன் கூடிய பிரம்மாண்ட மேடையும் அமைக்கப்பட்டுள்ளது.

அதிருப்தி
விவசாய நிலத்தில் தார்சாலை அமைக்கப்பட்டிருப்பதைக் கண்ட அப்பகுதி விவசாயிகள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த 5 ஆண்டுகளில் விவசாயிகளை பற்றி துளியும் கவலைப்படாதவரா தற்போது விளை நிலத்தில் தார் சாலை அமைக்க வருந்தப்போகிறார் என்று கூறியுள்ளனர்.

பாழான விளைநிலம்
உண்ண உணவு கொடுக்கும் பூமியில் தாரை ஊற்றி வீணடித்திருக்கின்றனர். அவற்றை மீண்டும் சரிசெய்வது எளிதானதல்ல. அந்தம்மா முக்கால் மணிநேரம் வந்து போக போவுது. அதற்காக வாழ்வாதாரமான விளை நிலத்தை பாழாக்கிவிட்டனர். இதன் விளைவு தேர்தலில் எதிரொலிக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.

பாடம் புகட்டுவோம்
எங்கள் விளை நிலத்தில் செருப்பு அணிந்துகூட செல்லமாட்டோம். புனித பூமியாக கருதும் விளை நிலத்தில், விவசாயிகளை மிரட்டி தார் சாலை அமைத்துள்ளனர். இந்தத் தேர்தலில் அவருக்கு சரியான பாடம் புகட்டுவோம் என்று தெரிவித்துள்ளனர்.

விவசாயிகள் ஒப்புதல்
அதே நேரத்தில் விவசாயிகளின் ஒப்புதலை பெற்றே விளைநிலங்களில் மேடை அமைத்துள்ளோம். பிரச்சார கூட்டம் முடிவுற்றதும், விளைநிலத்தை பழைய நிலைக்கு சரிசெய்து கொடுத்து விடுவோம் என்று அதிமுகவினர் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications