For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை.. தமிழகத்தில் இன்று முதல் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை.. மீறினால்..

Google Oneindia Tamil News

சென்னை : தமிழகம் முழுவதும், 40 மைக்ரான்களுக்கு குறைவான, பாலித்தீன் பை மற்றும் பிளாஸ்டிக் பைகளை விற்றால், இன்று முதல் பறிமுதல் செய்ய, அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில், 40 மைக்ரான்களுக்கும் குறைவான பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்த, ஏற்கனவே தடை உள்ளது. ஆனால், தடையை மீறி விற்பனை தொடர்கிறது.

plastic bag

இந்நிலையில், கடைகளில், 40 மைக்ரான்களுக்கும் குறைவான, பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பைகள் விற்கப்பட்டால் அவற்றை பறிமுதல் செய்யுமாறு, உள்ளாட்சி அதிகாரிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.

இத்தகவல், 'வாட்ஸ் ஆப்' மூலம் அனைத்து ஊழியர்களுக்கும், நேற்று தெரியப்படுத்தப்பட்டு உள்ளது.

சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 429 டன் பிளாஸ்டிக் குப்பைகள் சேர்கின்றன. டெல்லிக்கு அடுத்தபடியாக பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் சேரும் நகரமாக சென்னை உள்ளது குறிப்பிடத்தக்கது.

எனவே பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக காகித பைகளை பயன்படுத்த பொதுமக்கள் முன்வர வேண்டும் என்று விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

English summary
From today onwards imposed ban Plastic bags in Tamilnadu. If used plastic bags it will be sciezed
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X