நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் பின்னி பெடலெடுக்கும் மழை- நார்வே வானிலை மையம்
நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று நார்வே ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: சென்னையில் நாளை மாலை முதல் லேசான மழை தொடங்கி நள்ளிரவில் கனமழைக்கு வாய்ப்பு இருக்கும் என்று நார்வே வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 30-ஆம் தேதி தொடங்கியது. இதனால் அனறைய தினம் முதல் 10 நாள்களுக்கு சென்னையில் மழை கொட்டித் தீர்த்தது.
இடுப்பளவு தேங்கிய மழைநீரில் சென்னைவாசிகள் தத்ததளித்தனர். அதன்பிறகு வெயில் காய்வதும், விட்டு விட்டு மழை பெய்வதுமாக இருந்தது.

தாழ்வு நிலை
வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலை ஒட்டியுள்ள தென் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கனமழைக்கு வாய்ப்பு
இதனால் கடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. இந்த அறிவிப்பை கேட்ட சென்னைவாசிகள் இப்போதே அச்சம் அடைய ஆரம்பித்து விட்டனர்.

நாளை முதல் மழை
சென்னையில் மழை எப்படி இருக்கும் என்று நார்வே ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் அறிக்கையில், நாளை மாலை லேசான மழை தொடங்கும். பின்னர் நள்ளிரவு கனமழையாக உருவெடுக்கும்.

புதன்கிழமை முதல் குறையும்
நாளை தொடங்கவுள்ள மழை திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் அதிகப்படியாக இருக்கும். மேலும் புதன்கிழமை முதல் மழை படிப்படியாக குறையும் என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications