தூ... தண்ணி காட்டிய யுவராஜ்... தாலி கட்ட முயற்சித்த சு.சாமி... 2015ன் வைரல் வீடியோக்கள்!
சென்னை: விஜயகாந்த் செய்தியாளரைப் பார்த்து துப்பியது, திருமணத்திற்குத் தலைமை தாங்கிய சுப்பிரமணிய சாமி மணமகளுக்கு தானே தாலி கட்ட முயற்சித்தது என இந்தாண்டு பல பரபரப்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாக வலம் வந்தன.
இவற்றில் பல சீரியஸ் விஷயங்களைப் பேச, சில காமெடியால் சிரிக்க வைத்தன.
இதோ அவற்றில் சில உங்களுக்காக...
தாலி கட்ட முயற்சித்த சு.சாமி...
மே மாதம் திருநெல்வேலியில் திருமண விழா ஒன்றில் கலந்து கொண்ட பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மணமகனுக்கு தாலி எடுத்து கொடுக்கும் போது யாரும் எதிர்பாராத விதமாக மணமகளின் கழுத்தில் அவரே தாலியை கட்ட முயன்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி பலரது வயிறைப் புண்ணாக்கியது. நல்லவேளை அருகில் இருந்த சந்திரலேகா, நடக்க இருந்த அசம்பாவிதத்தை சுதாரித்துத் தடுத்தார்.
வாட்ஸ் அப்பில் வந்த அம்மா...
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாட்ஸ் அப் மூலம் ஆறுதல் சொன்ன ஆடியோவும் வைரல் தான். வணக்கம். உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன்' எனத் தொடங்கிய அந்த ஆடியோவைக் கேட்டு பலருக்கு கண்கள் வேர்த்தது.
அம்மா ஆணைக்கிணங்க மழை...
வெள்ளத்தில் சிக்கி சோகத்தில் இருந்த மக்களை சிரிக்க வைத்த பெருமைக்குரியவர் சேலம் மாவட்ட ஆட்சியாளர். அம்மாவின் ஆணைக்கிணங்க மழை பெய்தது என்ற இவரின் பேட்டியைப் பார்த்து அதிமுகவினரே கொஞ்சம் அரண்டு தான் போனார்கள். அம்மா ஆணைக்கிணங்க மழை பெய்தது உண்மையென்றால், அதற்கான சான்று எங்கே என ஒருவர் மனுத் தாக்கல் செய்து மேலும் ஜெர்க் தந்தார்.
மீண்டும் முதல்வரான ஓ.பி.எஸ்...
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தின் முதல்வராக பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம். அப்போது நடந்த பதவியேற்பு விழாவில், ஓபிஎஸ் உட்பட கதறிக் கதறி அழுதபடி பதவியேற்ற சம்பவம் வீடியோவாக வெளியாகி, உலகமே நம்மைப் பார்த்துச் சிரித்தது.
போலீசுக்கு தண்ணி காட்டிய யுவராஜ்...
கோகுல்ராஜ் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த யுவராஜ், போலீசாரிடம் வாட்ஸ் அப் மூலம் ஆடுபுலி நடத்தியது இந்தாண்டின் முக்கிய பரபரப்பு. தலைமறைவாக இருந்த அவர், அவ்வப்போது வாட்ஸ் அப்களில் ஆடியோ அனுப்பினார். அதனைத் தொடர்ந்து வீடியோ பேட்டியும் அளித்தார். போலீசில் சரணடையப் போவதாக அறிவித்து, போலீசாரின் கண்களில் எல்லாம் மிளகாய்ப் பொடி தூவி ஹீரோவாக வாட்ஸ் அப்பில் வலம் வந்தவர் யுவராஜ்.
புலியில் கிலி கிளப்பிய டி.ஆர்...
புலி பட ஆடியோ ரிலீசின் போது டி.ஆர். பேசியது அடடடா ரகம். அவர் தனது ஸ்டைலில் இது அட்டகாசமான புலி, அட்ராக் பண்ற புலி, அசத்தலான புலி' என அடுக்கிக் கொண்டே போக, அந்த வீடியோ சமூகவலைதளப் பக்கங்களில் வைரலாக வலம் வந்தது. கடைசியில் புலி "பலி"யானதுதான் பெரும் சோகம்.
உலகமே சிரித்த கேப்டன் யோகா!
பிரதமர் மோடி யோகா தினத்தைக் கொண்டாட உத்தரவிட்டதும், ஆளாளுக்கு கை, கால்களைத் தூக்கி யோகா செய்யத் தொடங்கினர். கேப்டனும் தன் பங்கிற்கு தானும் யோகா செய்ய, அதைப் பார்த்து பலருக்கு யோகாவே மறந்து போனது தனிக்கதை.
மூடு டாஸ்மாக்கை மூடு...
மக்கள் கலை, இலக்கிய கழகத்தை சேர்ந்த பாடகரான கோவன் பாடிய மூடு டாஸ்மாக்கை மூடு பாடல் சினிமா பாடல்களுக்கு இணையாக வைரல் ஆனது. பலர் இந்தப் பாடலை தங்களது காலர் டியூனாகவும் வைக்கத் தொடங்கினர். அதன் தொடர்ச்சியாக கோவன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பீப் பாடல்...
இதேபோல், அனிருத் இசையில் சிம்பு பாடிய பீப் பாடலும் திடீரென விஸ்வரூபம் எடுத்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான இப்பாடலை யாரோ தற்போது தூசி தட்ட, மீண்டும் ஒரு ரவுண்டு வந்தது இந்தப் பாடல். இந்தப் பாடல் தொடர்பாக சிம்பு மற்றும் அனிருத் மீது பல வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
பாகுபலி...
வசூலில் சாதனை புரிந்த பாகுபலி படத்தின் மேக்கிங் வீடியோவும் வைரலாகப் பரவி பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. படத்தின் ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் கையில் குழந்தையைப் பிடித்தும் காட்சியில், அவரது கையில் இருந்தது வாட்டர் பாட்டில் தான் என்பதை அறிந்து மக்கள் அப்படியே ஷாக் ஆனார்கள்.
தூ...
புத்தாண்டு பிறக்க இன்னும் சில தினங்களே இருந்த நிலையில் பத்திரிகையாளர்களைப் பார்த்து தூ எனத் துப்பி புதிய பரபரப்பை ஏற்படுத்தினார் விஜயகாந்த். விஜயகாந்த் எங்கே துப்பினார், எப்படி துப்பினார் ஏன் துப்பினார் என அனல் பறக்க விவாதங்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, அவரது தூ வீடியோவும் வைரல் ஆனது... இதுதான் இந்த ஆண்டின் முத்தாய்ப்பு வைரல்!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications