கபாலி பார்க்க லீவ்... டிக்கெட் ஃப்ரீ...: தனியார் நிறுவனம் அறிவிப்பு- ஊழியர்கள் மகிழ்ச்சி
சென்னை: கபாலி காய்ச்சல் உலகம் முழுவதும் நெருப்பாய் பற்றி எரிய... ஜூலை 22ல் லீவ் கேட்டு நிறுவனங்களில் அப்ளிகேசன்கள் குவிய... தனியார் நிறுவனம் ஒன்று ஜூலை 22ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளதோடு இலவச டிக்கெட்டும் வழங்கி ஊழியர்களுக்கு 2 லட்டு கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் கபாலி. ராதிகா ஆப்தே, ரித்விகா ஆகியோர் நடித்துள்ளனர். கபாலி திரைப்படம் வரும் 22ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து அன்றைய தினம் பல நிறுவனங்களில் ஊழியர்கள் விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ளனராம்.

பல ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு டிக்கெட்டுகளை மொத்தமாக எடுத்துக் கொடுத்து அவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
சென்னையில் உள்ள பைன்டஸ் என்ற மொபைல் ஆப் நிறுவனம் ஒன்று ஊழியர்களுக்கு விடுமுறை அறிவித்துள்ளது. திரைப்படம் வெளியாகும் நாளில் ஊழியர்கள் பலர் விடுமுறை எடுக்க கூடும் என்பதால் முன்னதாகவே விடுமுறையை அறிவித்து விட்டதாக அந்நிறுவன நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதோடு ஊழியர்கள் திரைப்படத்தை காண இலவச டிக்கெட்டும் அளிப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் பைன்டஸ் நிறுவன ஊழியர்கள் 2 டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
துபாயில் உள்ள நோவோ திரையரங்கில் கபாலி திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. முதல் நாள் முதல் காட்சி பார்க்க நண்பர்களுடன் புக் செய்துள்ள நபர்கள் இதனை வாட்ஸ் அப்பில் பதிவிட்டு நண்பர்களின் காதில் புகை வருவதை ரசித்து வருகின்றனர்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications