"வருத்தப்படாத வாசன் காங்கிரஸ்"..... பெயர் வைப்பதில் தலையை உடைத்துக் கொண்டிருக்கும் வாசன் குரூப்!
சென்னை: கட்சி தொடங்கப் போவதாக சொல்லி விட்ட நிலையில் கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்று தெரியாமல் பெரும் குழப்பமாகிக் கிடக்கிறதாம் வாசன் குரூப். ஆளாளுக்கு ஒரு பெயரை வாசனுக்குப் பரிந்துரைத்துக் கொண்டுள்ளனர். அவரும் வருகிற பெயர்களை எல்லாம் வாங்கி வைத்துக் கொண்டு தீவிரமாக பரிசீலித்து வருகிறாராம்.
தமிழ் மாநில காங்கிரஸ் என்றே பெயர் வைப்போம் என்று பலரும் கூறியுள்ளனராம். அதேசமயம், புதுப் பெயரா வச்சா நல்லாருக்குமே என்று சிலர் ஐடியா கொடுத்துள்ளனராம்.
எந்த மாதிரி பெயர் வைக்கலாம் என்பது குறித்தும் பெயர் ஐடியாக்கள் குவிந்து கொண்டிருக்கிறதாம்.

காமராஜர் காங்கிரஸ்.. மூப்பனார் காங்கிரஸ்
சிலர் காமராஜர் காங்கிரஸ் என்று பெயர் வைக்கலாம் என்று ரொம்பப் பழைய பெயராக பரிந்துரைத்துள்ளனர். சிலர் மூப்பனார் காங்கிரஸ் என்றுவைக்கலாம் என்று ஐடியா கொடுத்துள்ளனர்.

பேசாம வாசன் காங்கிரஸ்னே வச்சுட்டா...!
இன்னும் சிலர் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ், என்.ஆர். காங்கிரஸ் போல வாசன் காங்கிரஸ்னு வச்சுட்டா என்ன தம்பி என்றும் வாசனிடம் ஐடியா கூறியுள்ளனராம்.

ஞானம் சார்.. இது என்னோட லிஸ்ட்!
ஞானதேசிகன்தான் இந்தப் பெயர் பட்டியலை எல்லாம் வாங்கி நல்ல பெயராக பரிசீலித்துக் கொண்டிருக்கிறாராம். எனவே அவரிடம் பேப்பர் பேப்பராக ஐடியாக்கள் குவிந்து கொண்டிருக்கிறதாம்.

தமாகாவுக்கு ஒரு சிக்கல்
தமிழ் மாநில காங்கிரஸ் என்ற பெயருக்கு மாறுவதிலும் ஒரு சிக்கல் உள்ளதாம். அதாவது தமிழகத்தில் தற்போது தமாகா இல்லை. மாறாக, தமிழக மக்கள் காங்கிரஸ் என்று ஒரு குட்டியூண்டு கட்சி உள்ளது. எனவே தமாகா என்ற பெயரில் அழைத்தால் அந்தக் கட்சிக்கு ஓசியில் பிரபலம் கிடைத்து விடும் அபாயம் உள்ளது.

பேசாம இப்படி வச்சா...
தமிழக மூப்பனார் காங்கிரஸ் என்று பெயரிட்டால் இந்தப் பிரச்சினை வராது, தமாகா என்பதற்கு பதில் தமூகா என்று அழைக்கலாமே என்று சிலர் புத்திசாலித்தனமாக ஐடியா கொடுத்து வருகிறார்களாம்.

நம்ம பங்குக்கு சில ஐடியாக்கள்
இது வாசன் கட்சியினரின் ஐடியாக்கள். இனி நமது பங்குக்கு சில ஐடியாக்களை அவருக்கு தட்டி விடுவோம். இதையும் பரிசீலித்துப் பார்க்கட்டும்.

த.தி.கா.
அதாவது தமிழக திராவிட காங்கிரஸ். திராவிடமும் சேர்ந்தாச்சு, காங்கிரஸும் இருக்கு, தமிழ்நாடும் இருக்கு..!

பா.ம.கா.
இது வேற அது வேற.. இது பாட்டாளி மக்கள் காங்கிரஸ். ஆனால் இப்படி வைத்தால் கண்டிப்பாக குழப்பம் வரும். இருந்தாலும் பரிசீலிக்கலாம்.

தி.மு.கா.
இதுவும் அதே மாதிரிதான் அந்த திமுக அல்ல.. இது திராவிட முன்னேற்ற காங்கிரஸ். இங்கேயும் திராவிடத்தையும், தேசியத்தையும் இணைத்த மாதிரியான பெயர்தான்.

கா.மூ.தி.மு.கா...!
அதாவது காமராஜர் மூப்பனார் திராவிட முன்னேற்ற காங்கிரஸ். இங்கேயும் திராவிடமும் இருக்கிறது, தேசியமும் இருக்கிறது. டிஎம்டிகே மாதிரி இது கேஎம்டிகே... !

"ஐயா" காங்கிரஸ்
அம்மா கட்சி என்று செல்லமாக அதிமுகவை அழைப்பார்கள். பேசாமல் ஐயா காங்கிரஸ் என்று மறைமுகமாக மூப்பனார் பெயரை கட்சிக்குச் சூட்டி விடலாம்.

ப.சிதம்பரம் ஒழிப்பு காங்கிரஸ்
இப்படியும் கூட பெயர் வைக்கலாம். தப்பே இல்லை. ப.சிதம்பரம்தானே வாசன் தரப்புக்கு நீண்ட நாள் இர்ரிட்டேஷன். அதை இப்படி பெயர் வைத்து பகிரங்கமாக்கி விடலாம். கொள்கை குறித்து விளக்கவே தேவையில்லை. பச்சப் புள்ள கூட பார்த்ததுமே புரிஞ்சிக்கும்.. !

வருத்தப்படாத வாசன் காங்கிரஸ்
"வின்னர்" வடிவேலு மற்றும் "பரோட்டா" சூரிக்கு தேங்ஸ் சொல்லலாம்.. இப்படி ஒரு அருமையான பெயர் பற்றி யோசிக்க வாய்ப்பு கொடுத்ததற்காக.

தேமுதிகான்னு வச்சா..!
அதாவது தேசிய முற்போக்கு திராவிட காங்கிரஸ் என்று வைத்தால் வாய்க்கு வலிக்காத வகையில் பெயர் சற்று நைஸாக இருக்கும்.. முயற்சித்துப் பார்க்கலாம். கேப்டனுடன் கூட்டு வைக்கும்போது ரொம்ப செளகரியமாகவும் இருக்கும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications