மதுவிலக்கை அமல்படுத்த கோரி 1 கோடி பேரிடம் கையெழுத்து... ஆளுநரிடம் சமர்பித்தார் ஜி.கே.வாசன்
சென்னை: தமிழகத்தில் உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த கோரி ஒருகோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்தை ஆளுநரிடம் ரோசய்யாவிடம் நேரில் சமர்பித்தார் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன்.
தமிழகத்தில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்திருந்தார். இதனையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் மதுவினால் ஏற்படும் தீமைகளை எடுத்துக்கூறி பூரண மது விலக்கை அமல்படுத்துவதற்கு ஒரு கோடி பேரிடம் கையெழுத்துப் பெறும் இயக்கத்தை வாசன் கடந்த ஆகஸ்ட் மாதம் தொடக்கி வைத்தார்.

இதையடுத்து தமிழகம் முழுவதும் தமாகா சார்பில் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு வந்தது. ஜி.கே.வாசனும் மக்களுக்காக மக்களை நோக்கி என்ற திட்டத்தின் படி பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களிடம் மதுவினால் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துக் கோரி வந்தார்.
இந்நிலையில், இன்று மாலை ஜி.கே.வாசன் ஆளுநர் மாளிகைக்கு வந்தார். அங்கு ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரி மனு ஒன்றை கொடுத்தார். மேலும் ஒரு கோடி பேரிடம் பெறப்பட்ட கையெழுத்தையும் ஆளுநரிடம் வாசன் சமர்ப்பித்தார்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications