நேர்மை, எளிமை, வெளிப்படையான ஆட்சி: இது தமாகாவின் தேர்தல் உறுதிமொழி
சென்னை: தமிழத்தில் எளிமை, நேர்மை, வெளிப்படையான ஆட்சியை மது இல்லாத தமிழகத்தை மக்கள் நலக்கூட்டணி - தேமுதிக - தமாகா மட்டுமே அளிக்க முடியும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் தேமுதிக கூட்டணியில் போட்டியிடும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை தேனாம்பேட்டையில் ஜி.கே.வாசன் இன்று வெளியிட்டார்.
அப்போது பேசிய அவர், தேர்தல் உறுதிமொழி என்ற பெயரில் 43 பக்கங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதற்காக தே.மு.தி.க.-மக்கள் நல கூட்டணி, த.மா.கா. இணைந்த வெற்றிக்கூட்டணிக்கு வாக்களிக்க மக்கள் தயாராக உள்ளதாகவும் கூறினார்.

இளைஞர்கள், மாணவர்கள், புதிய வாக்காளர்கள் அனைவரும் புதிய ஆட்சி அமைய வேண்டும் என எண்ணுகிறார்கள். அவர்கள் விரும்பும் ஆட்சியை எங்கள் கூட்டணியால் மட்டுமே கொடுக்க முடியும் என்று கூறிய அவர், தேர்தல் அறிக்கையில் உள்ள சில முக்கிய அம்சங்களை பட்டியலிட்டார்.
•நேர்மையான, எளிமையான, வெளிப்படையான மதுவில்லாத தமிழகத்தை உருவாக்குவோம்
•காவல்துறையில் சீரமைப்பு
• விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்
•உணவு, உறைவிடம் , கல்வி, வேலைவாய்ப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படும்
•மது இல்லாத மாநிலத்தை மநகூ - தேமுதிக - தமாகா கூட்டணி உருவாக்கும்
•மாணவர்களுக்கு எளிமையான முறையில் கல்விக்கடன் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்
•இலங்கை தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க தமாகா வலியுறுத்தும்
தேர்தல் அறிக்கை வெளியிட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், வாக்காளர்களின் எதிர்பார்ப்பை தமாகா பூர்த்தி செய்யும் என்றும் கூறினார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications