ஜெ. மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பு.. ஜி.ராமகிருஷ்ணன் அஞ்சலி
ஜெயலலிதாவின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பு என்று ஜி. ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு சிபிஎம் கட்சியின் மாநில செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ஜி. ராமகிருஷ்ணனின் இரங்கல் செய்தி:
ஜெயலலிதா அவர்களுக்கு தலைசிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிகிச்சை பலனின்றி மறைந்தார் என்ற செய்தி தமிழக மக்களுக்கு மட்டுமல்ல தேசத்து மக்களுக்கே ஒரு அதிர்ச்சியாக உள்ளது. மாநில முதல்வர் ஜெயலலிதா திரைப்படத் துறையில் தன்னுடைய வாழ்க்கையை தொடங்கி அதிமுகவில் சேர்ந்து எம்ஜிஆரின் மறைவிற்கு பிறகு மக்கள் செல்வாக்கோடு முதலமைச்சாராக பதவி ஏற்றார்.

தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்திருக்கிறார். அண்ணா, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு பின்னர், முதல்வராக பதவியில் இருக்கும் போதே மறைந்திருக்கிறார். இம்மாநிலத்து மக்கள் பிரச்சனையான நதி நீர் தாவா பிரச்சனையாக இருந்தாலும், வேறு எந்த பிரச்சனையாக இருந்தாலும், நெஞ்சுறுதியோடு பிரச்சனையை எதிர் கொண்டவர். மாநில மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்தவர்.
எம்.ஜி.ஆர். தொடங்கி நடத்திய சத்துணவுத் திட்டத்தை சிறப்பாக நடத்தி காட்டியவர். தமிழக மக்களின் பேராதரவோடு ஆட்சி அமைத்த அவரின் மறைவு என்பது ஈடு செய்ய முடியாத இழப்பு. அவரை பிரிந்து வாழக் கூடிய லட்சோப லட்ச அதிமுக தொண்டர்களுக்கு சிபிஎம் கட்சியின் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் மறைவிற்கு சிபிஎம் கட்சியின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று ஜி. ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications