சி.பி.எம். மாநிலச் செயலாளராக ஜி. ராமகிருஷ்ணன் மீண்டும் தேர்வு!!
Subscribe to Oneindia Tamil
சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக ஜி. ராமகிருஷ்ணன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 21-வது தமிழ் மாநில மாநாடு சென்னையில் நடைபெற்றது. இம்மாநாட்டில் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் சீத்தாராம் யெச்சூரி, கே. வரதராசன், பிருந்தா காரத், ஏ.கே. பத்மநாபன் மற்றும் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன் எம்.பி., உ. வாசுகி, அ. சவுந்ததராசன், பி.சம்பத், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் ஜி. ராமகிருஷ்ணன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.












Click it and Unblock the Notifications