கல்விக் கடன் திருப்பி செலுத்தாவிடில் வங்கித் தேர்வில் பங்கேற்க தடையா? - ஜி.ரா கண்டனம்
சென்னை: மாணவர்கள் வங்கிக் கடனை திருப்பி செலுத்தவில்லை என்பதற்காக வங்கித் தேர்வில் பங்கேற்க தடை விதிப்பதா என்று ஸ்டேட் பேங்கிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரத ஸ்டேட் வங்கியின் 17 ஆயிரத்து 140 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன் லைன் மூலம் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் வங்கிகளில் கடன் பெற்ற மாணவர்கள் அதை திரும்ப செலுத்தவில்லையென்றால், விண்ணப்பிக்க தகுதியில்லை என்று நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. இது கல்விக் கடன் பெற்ற மாணவர்களை தேர்வு எழுத தடுக்கும் வகையில் போடப்பட்ட உத்தரவாகும். பாரத ஸ்டேட் வங்கியின் இந்த உத்தரவை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

கல்வி பயில மாணவர்கள் வங்கிகளில் கடன் பெற்றிருந்தால் பணிக்குச் சென்றால் தான் அதை திருப்பிச் செலுத்த இயலும். ஆனால் வேலை கிடைக்கவில்லையென்றாலும் கடைசி தவணை முடிந்த ஒருவருட காலத்திற்கு பிறகு வட்டியுடன் கடனை திருப்பிச் செலுத்தவேண்டும் என வங்கி நிர்வாகங்கள் நிர்பந்திக்கின்றன.
இந்த நிலையில் மேலும் ஒரு தாக்குதலாக வங்கிக் கடன் பெற்று செலுத்தாத மாணவர்கள் தேர்வுகளில் பங்கேற்க முடியாது என்று கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இது வங்கிக் கடன் பெற்ற மாணவர்களின் வேலை வாய்ப்பபை மறுப்பதோடு அவர்களை கடனாளியாக்குவதுடன் அவர்கள் மீது கடன் சுமையை ஏற்றி விடுகிறது. மற்றொருபுறம் மாணவர்களுக்கு இந்த வாய்ப்பை மறுப்பதால் வங்கிகளுக்கும் கடன் சுமை கூடுகிறது.
மாணவர்களின் கல்விக்கடனுக்கான வட்டியை மத்திய அரசு ஒரு குறிப்பிட்ட சதவீதம் மானியமாக வழங்குகிறது. இந்தத் தொகையை மத்திய அரசு செலுத்தவில்லை என்றாலும் கூட மாணவர்கள் முறையாக கடனை திருப்பி செலுத்தவில்லை என்று கூறி மாணவர்கள் தேர்வு எழுத முடியாத நிலை ஏற்படுத்தப்படுகிறது.
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் பிரிவு 14ல் குறிப்பிடப்பட்டுள்ள அனைவரும் சமம் என்பதற்கு இந்த உத்தரவு முற்றிலும் எதிரானதாகும். எனவே இந்தப் பிரச்சனையில் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஸ்டேட் வங்கியின் நிபந்தனையை ரத்து செய்ய வேண்டுமெனவும், அனைவரும் தேர்வு எழுதும் வண்ணம், தேர்வு எழுத மாணவர்கள் விண்ணப்பிக்கும் கடைசி தேதியான ஏப்ரல் 25 ஆம் தேதியை நீட்டித்து உத்தரவிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு மத்திய அரசை வலியுறுத்துகிறது" என்று தெரிவித்துள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
தங்கத்தை தாறுமாறாக வாங்கி குவிக்கும் உலக நாடுகளின் மத்திய வங்கிகள்.. சீனா செய்த பெரிய சம்பவம் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்?












Click it and Unblock the Notifications