சோமனூர் பேருந்து நிலைய கட்டிட விபத்து... ககன்தீப்சிங் பேடி விசாரணை தொடங்கியது
கோவை: சோமனூர் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்த விபத்து குறித்த விசாரணையை ககன்தீப் சிங் பேடி தொடங்கினார்.
கோவை அருகே சோமனூர் பஸ் நிலைய மேற்கூரை கடந்த செப்டம்பர் 7ம் தேதி இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் பேருந்துக்காக காத்திருந்த 20 வயது கல்லூரி மாணவி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். பேருந்து நிலைய கட்டிட விபத்து தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இந்நிலையில், ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டு விபத்து குறித்து விசாரித்த அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டது. இதன்படி ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப் சிங் இன்று முறைப்படி விசாரணையைத் தொடங்கியுள்ளார். காவல்துறையிடமிருந்து விபத்து குறித்த ஆவணங்களும், கட்டுமானம் குறித்த ஆவணங்களும் கோரியுள்ளார்.
மேலும் நாளை காலை விபத்து நடந்த சோமனூர் பஸ் நிலையத்தை ககன்தீப் சிங் பார்வையிடுகிறார். விபத்துக்கான காரணம் என்ன? யார் பொறுப்பு உள்ளிட்ட கோணங்களில் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக ககன்தீப் சிங் பேடி கூறியுள்ளார். மேலும் விபத்து குறித்து முழுவதும் விசாரணை நடத்தி 2 மாதத்திற்குள் அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications