65 திமுக மாவட்ட செயலாளர் பதவிகளுக்கு இன்று தேர்தல்- 'காந்தி, நேரு' போட்டியில் இல்லை?

Subscribe to Oneindia Tamil

சென்னை: திமுகவில் புதிதாக உருவாக்கப்பட்ட 65 மாவட்ட செயலாளர் பதவிகளுக்கான தேர்தல் இன்று தொடங்குகிறது. இந்தத் தேர்தலில் திமுகவின் குறுநில மன்னர்களாக கோலோச்சிய கே.என்.நேரு, வேலூர் காந்தி, நெல்லை கருப்பசாமி பாண்டியன், தூத்துக்குடி பெரியசாமி, திண்டுக்கல் பெரியசாமி உள்ளிட்ட பலரும் நேரடியாக இறங்காமல் ஆதரவாளர்களை களம் இறக்கியிருக்கின்றனர்.

Gandhi, Nehru not contest in DMK Dist. Secretary elections?

லோக்சபா தேர்தலில் திமுக தோல்வி அடைந்த பின்னர் திமுகவில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன்படி 35-ல் இருந்து திமுக மாவட்டங்கள் 65 ஆக பிரிக்கப்பட்டன.

இந்த 65 மாவட்டங்களுக்கான புதிய செயலாளர் தேர்தல் நாளை தொடங்குகிறது. தற்போதைய கள நிலவரப்படி திமுகவில் மாவட்ட செயலாளர்களாக வர யாருக்கு வாய்ப்புள்ளது? எனப் பார்க்கலாம்.

  • கரூர் மாவட்டத்தில் நன்னியூர் ராஜேந்திரன், கே.சி. பழனிச்சாமி இடையே போட்டி. இதில் கே.சி. பழனிச்சாமிக்கு கூடுதல் வாய்ப்பு.
  • தஞ்சை தெற்கு மாவட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏக்கள் மகேஷ் கிருஷ்ணசாமி, துரை சந்திரசேகர் இடையே போட்டி. இவர்களில் துரை சந்திரசேகருக்கு வாய்ப்பு அதிகம்.
  • தஞ்சை வடக்கு மாவட்டத்தில் கும்பகோணம் எம்.எல்.ஏ சாக்கோட்டை அன்பழகன் மற்றும் ராமலிங்கம், கல்யாணசுந்தரம் ஆகியோர் இடையே போட்டி இருக்கிறது. இதில் சாக்கோட்டை அன்பழகனுக்கே அதிக சான்ஸ்.
  • திருவாரூர் மாவட்டத்தில் பூண்டி கலைவாணனுக்கு அதிக வாய்ப்பு.
  • பெரம்பலூர் மாவட்டத்தில் குன்னம் ராஜேந்திரன், வெங்கடாசலம் ஆகியோர் பிரதான போட்டியாளர்கள். இவர்களில் குன்னம் ராஜேந்திரனுக்கு அதிக சான்ஸ்.
  • அரியலூர் மாவட்டத்தில் எஸ்.எஸ்.சிவசங்கர் 'அன்னபோஸ்ட்டாக' வெல்கிறார்
  • கோவை மாநகர் வடக்கு மாவட்டத்தில், வீரகோபால், மீனா லோகநாதன் இடையே போட்டி. இதில் வீரகோபாலுக்கு சான்ஸ்
  • கோவை மாநகர் தெற்கு மாவட்டத்தில் குறிச்சி பிரபாகரனும், முத்துசாமி, முன்னாள் துணை மேயர் கார்த்திக் ஆகியோர் களம் காணுகின்றனர். இதில் கார்த்திக்கு அதிக வாய்ப்பு.
  • கோவை புறநகர் வடக்கில் சி.ஆர். ராமச்சந்திரன், சுரேந்திரன் ஆகியோரிடையே போட்டி. இதில் சுரேந்திரனுக்கு வாய்ப்பு அதிகம்.
  • கோவை புறநகர் தெற்கு மாவட்டத்தில் தமிழ் மணி, பாரி ஆகியோரிடையே போட்டி. இதில் தமிழ் மணி வெல்வதற்கு வாய்ப்புகள் அதிகம்.
  • திருப்பூர் வடக்கில் வெள்ளக்கோவில் சாமிநாதன், திருப்பூர் செல்வராஜு இடையே போட்டி. இதில் செல்வராஜூ.க்கு சான்ஸ் அதிகம்,
  • தெற்கு மாவட்டத்தில் மூலனூர் பத்மநாபன், உடுமலை வேலுசாமி, குண்டம் சேகர், பொங்கலூர் மணி இடையே போட்டி. உடுமலை வேலுசாமிக்கு அதிக வாய்ப்பு.
  • நீலகிரியில் முபாரக் அன்னபோஸ்ட்டாக வெல்கிறார்
  • 'மதுரை மாநகர் மாவட்டம் (தெற்கு) பொறுப்புக்கு மூர்த்தி, கொட்டாம்பட்டி ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் தமிழரசி இடையே போட்டி. மூர்த்திக்கே அதிக வாய்ப்புகளாம்.
  • மதுரை புறநகர் மாவட்டம் (தெற்கு) பொறுப்புக்கு சேடப்பட்டி முத்தையா, பொன்.முத்துராமலிங்கம், வி.கே.குருசாமி, எஸ்ஸார் கோபி ஆகியோர் போட்டியில் இருக்கின்றனர். இதில் சேடபட்டியாருக்கு அதிக சான்ஸ்
  • மதுரை மாநகர் (வடக்கு) மாவட்டத்துக்கு கோ.தளபதி, ஜெயராமனும் வேலுச்சாமி இடையே போட்டி. கோ. தளபதிக்கே அதிக வாய்ப்பு உண்டாம்.
  • மதுரை புறநகர் (வடக்கு) மாவட்டத்தில் பொன்.சேது, ஜெயராமன், கார்த்திகேயன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் பொன்.சேதுவுக்கு (பொன். முத்துராமலிங்கம் மகன்) வாய்ப்பு அதிகம்
  • 'சிவகங்கையில் பெரியகருப்பன், தென்னவன் இடையே போட்டி. தென்னவன் கை ஓங்கக் கூடுமாம்
  • தேனி மாவட்டத்தில் மூக்கையா, கம்பம் ராமகிருஷ்ணன் இடையே போட்டி. இதில் கம்பம் ராமகிருஷ்ணனுக்கு வாய்ப்பு அதிகம்.
  • புதுக்கோட்டை தெற்கு மாவட்டத்தில் கே.பி.கே.தங்கவேல், ராஜு, மெய்யநாதன் ஆகியோர் போட்டியாளர்கள். இதில் மெய்யப்பனுக்கு வாய்ப்பு.
  • ''நெல்லை மேற்கு மாவட்டச் செயலாளர் பதவிக்கு பூங்கோதை, கருப்பசாமி பாண்டியனின் மகன் வி.கே.பி.சங்கர், யு.எஸ்.டி.சீனிவாசன் இடையே போட்டி. வி.கே.பி. சங்கருக்கு அதிக வாய்ப்பு என்கின்றனர்..
  • நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு அப்பாவு, ஞானதிரவியம், கிரஹாம்பெல் ஆகியோர் இடையே போட்டி. அப்பாவுக்கே அதிக சான்ஸாம்.
  • நெல்லை கிழக்கு மாவட்டத்தில் சுரேஷ்ராஜன், மனோதங்கராஜ் இடையே போட்டி. இதில் சுரேஷ் ராஜனுக்கே ஜெயம்.
  • நெல்லை மேற்கு ஜீவராஜன், ஹெலன் டேவிட்சன் இடையே போட்டி. ஜீவராஜனுக்கு சான்ஸாம்
  • தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலர் பதவிக்கு பெரியசாமி மகன் ஜெகன் அன்னபோஸ்ட்டாக வரலாம். அல்லது கீதா ஜீவன் அன்ன போஸ்ட்டாக வெல்லலாமாம்.!
  • தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் ராதாகிருஷ்ணன், ராஜாராம் களத்தில் நிற்கின்றனர். இருவருக்கும் போட்டியாம்.
  • விருதுநகர் வடக்கு மாவட்டத்தில் தங்கம் தென்னரசு; தெற்கு மாவட்டத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் அன்னபோஸ்ட்டாக வெல்கின்றனர்
  • ராமநாதபுரத்தில் முருகவேல், சுப.தங்கவேலனுக்கு இடையே போட்டி.. சுப. தங்கவேலன் வெல்வாராம்
  • கடலூர் கிழக்கு மாவட்டத்தில் எம்.ஆர்.கே.பன்னீர்செல்ம் அன்ன போஸ்ட்டாக ஜெயிக்கலாமாம்!
  • கடலூர் மேற்கு மாவட்டத்தில் போட்டி இருந்தாலும் சபா.ராஜேந்திரன் வெல்வாராம்
  • விழுப்புரம் வடக்கு மாவட்டத்தில் கண்ணன், சேகர், மஸ்தான், வசந்தவேல் ஆகியோருக்கு இடையே போட்டி அதிகம் இருக்கிறது. இதில் வசந்தவேல் வெல்ல வாய்ப்புண்டு.
  • விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் உதயசூரியன், ஆதிசங்கர் ஆகியோர் மோதுகிறார்கள். உதயசூரியனுக்குத்தான் வாய்ப்பு அதிகமாம்.
  • விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் போட்டியிட்டால் பொன்முடி அன்னபோஸ்ட்டாக வெல்வாராம்!
  • திருவண்ணாமலை வடக்கு மாவட்டத்தில் சிவானந்தமும், அன்பழகனும் போட்டியிடுகிறார்கள். இதில் சிவானந்தமுக்கு வாய்ப்பு அதிகம்,.
  • திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் எ.வ.வேலு அன்ன போஸ்ட்டாக ஜெயிக்கிறாராம்
  • வேலூர் கிழக்கு மாவட்டத்தில் அ.அசோகன், சுந்தரமூர்த்தி இடையே போட்டி. இதில் சுந்தரமூர்த்திக்கு வாய்ப்பு அதிகம்,
  • வேலூர் மேற்கு மாவட்டத்தில் சூரியகுமார், சிவாஜி, தேவராஜ் இடையே போட்டி. இங்கு போட்டி கடுமையாக இருக்குமாம்
  • திருச்சியில் முன்னாள் அமைச்சர் செல்வராஜ், தெற்கு மாவட்டத்தில் அன்பில் பெரியசாமிக்கு வாய்ப்பாம்.
  • சேலம் கிழக்கு மாவட்டத்தில் வீரபாண்டி ராஜா- சிவலிங்கம் இடையே போட்டி. இதில் வீரபாண்டி ராஜாவுக்கே வாய்ப்பு உண்டு.
  • சேலம் மேற்கு மேட்டூர் கோபார்- ராஜேஷ் இடையே போட்டி இருக்கிறது. இதில் கோபாலுக்கு வாய்ப்பு அதிகம்,
  • சேலம் மத்திய மாவட்டத்தில் டி.எம்.செல்வகணபதி, பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் இடையே போட்டி. இதில் பனைமரத்துப் பட்டி ராஜேந்திரன் வெல்வாராம்.
  • நேரு- காந்தி போட்டி இல்லை?
  • இந்த தேர்தலில் திருச்சி கே.என். நேரு, தூத்துக்குடி பெரியசாமி, கோவை பொங்கலூர் பழனிச்சாமி, நெல்லை கருப்பசாமி பாண்டியன், திண்டுக்கல் ஐ. பெரியசாமி, வேலூர் காந்தி என இத்தனை ஆண்டுகாலம் குறுநில மன்னர்களாக கோலோச்சியவர்கள் போட்டியிடமாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+