ரஜினி அண்ணே...கிராமத்து படங்களை பண்ணுங்க....இது கங்கை அமரன் வேண்டுகோள் #rajinikanth
சென்னை: முரட்டுக்காளை போன்ற கிராமத்து படங்களில் ரஜினிகாந்த் மீண்டும் நடிக்க வேண்டும் என்று இசையமைப்பாளர் கங்கை அமரன் வேண்டுகோள் விடுத்துளாள்ர்.
நக்கீரன் வார இதழில் பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் தொடரில் இது தொடர்பாக கங்கை அமரன் எழுதியுள்ளதாவது:
இந்த தொடர் மூலமா... பெரும்பாலான ரசிகர்களோட ஆசய... என்னோட விருப்பத்த... நான் ஒரு கிராமத்தான்ங்கிற சந்தோஷத் தோட... ரஜினி சார் கவனத்துக்கு ஒரு விஷயத்த முன்வைக்கிறேன்.
அதாவது... அண்ணன் பஞ்சு அருணாச்சலம் வித்தியாசமான கேரக்டர்கள உருவாக்கி... நெறைய படங்களுக்கு கதை -திரைக்கதை -வசனம் எழுதியிருக்கார்.

எல்லாமே ரொம்ப நல்லா ஓடின படங்கள்.
புவனா ஒரு கேள்விக்குறி, ஆறிலிருந்து அறுபது வரை'னு ரஜினிக்கி குணச்சித்திர கதாபாத்திரங்கள உருவாக்கி... ரஜினியோட ஆக்டிங் கெப்பாஸிட்டிய ரசிகர்களுக்கு காட்டின... பஞ்சு அருணாச்சலம்... ஏ.வி.எம். நிறுவனத்துக்காக எஸ்.பி.முத்துராமன் டைரக்ஷன்ல உருவாக்கின படம் முரட்டுக்காளை.'
இதுல "காளையன்'ங்கிற கேரக்டர உருவாக்கினார்.
ரஜினி நடிச்ச முரட்டுக்காளை' படம்... என்ன மாதிரி ஹிட்டடிச்ச படம்ங்கிறது ஒங்களுக்கெல்லாம் தெரியும்.
கிராமங்கள்ல வச்சு... மக்களோட கலந்து... மக்களுக்கு மத்தியில எடுத்த படம் அது.
நாங்களும் பண்ணைப்புரத்து கிராமத்து ஆளுங்கதானே.
பொதுவாக எம்மனசு தங்கம்'பாட்டுல... கிராமிய மணத்தையும், திருவிழா எஃபெக்ட்டையும் ராஜாண்ணன் கொண்டு வந்திருப்பார்.
வெகுஜன ரசிகர்களா கிராமத்து ஜனங்களே இருக்கிறதுனால... இந்தப் படத்த மக்கள் அப்படி ரசிச்சாங்க.
பண்ணையார் அட்டூழியம், நியாயத்துக்கு குரல் கொடுக்கிற இளைஞன், காதல், சூது, வஞ்சம், ஜல்லிக்கட்டு.... இப்படி கிராமத்து வாழ்க்க... ஹீரோயிஸ கமர்ஷியல்ல கலந்து வந்துச்சு.
அதனால மக்கள் கொண்டாடினாங்க.
ரஜினியோட சினிமா வாழ்க்கைல இந்தப் படம் பெரிய திருப்புமுனையா இருந்துச்சு.
ரஜினி எத்தனை படம் வேணாலும் ஆக்ஷன் படங்கள்ல... நகர பின்னணியில ஆக்ஷன் அதிரடிப் படங்கள் பண்ணட்டும்.
ரஜினி இந்த மாதிரி எத்தன படங்கள் பண்ணாலும் ஓடும்.
அதேசமயம்.... கிராமியப் படங்களுக்கு எப்பவுமே தனி ஈர்ப்பு அப்பவும், இப்பவும், எப்பவும் உண்டு.
ஆனா... இப்பவெல்லாம் பெரிய ஹீரோக்கள் பெரும்பாலும் முழுமையான... கிராமத்து வாழ்க்கய பிரதிபலிக்கிற கிராமியப் படங்கள் பக்கம் போறதில்ல.
ரஜினி கொஞ்சம் திங்க் பண்ணி... கிராமத்து படம் ஒண்ணு பண்ணணும்... நடிக்கணும்.
கன்ஸிடர் பண்ணுங்க ரஜினி அண்ணே...
பெரிய ஹீரோக்கள்லாம்... கண்டுக்காம இருந்தீங்கன்னா எப்படி? கொஞ்சம் வாங்க... கிராமத்துப் பக்கம். நம்ம கிராமத்து ஜனங்களவும் பாருங்க...
இவ்வாறு அதில் கங்கை அமரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications