அரசியல் ஆதாயத்திற்காகவா ரஜினியை சந்தித்தேன்…. ஆடிப்போன கங்கை அமரன்
அரசியல் ஆதாயத்திற்காக நான் ரஜினியை சந்திக்கவில்லை என்று ரஜினிக்கே தெரியும் என்று அண்மையில் பாஜகவில் சேர்ந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் கூறியுள்ளார்.
சென்னை: ஆர்.கே. நகர் வேட்பாளராக நிறுத்தப்பட்ட போது கங்கை அமரன் ரஜினியை நேரில் சந்தித்தார். இது அரசியல் ஆதாயத்திற்கான சந்திப்பில்லை என்று ரஜினிக்கு தெரியும் என்று கங்கை அமரன் கூறியுள்ளார்.
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நிகழ்ச்சி இன்று தொடங்கியது.
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசும் போது 'ஆதாயத்திற்காக சிலர் அணுகும் போது ஆதரிப்பதில்லை' என்று கூறினார். இது குறித்து இமையமைப்பாளர் கங்கை அமரன் கூறியதாவது:

சூசகம்
ரஜினியை நம்பி இருக்கக் கூடிய ரசிகர்களை அவர் ஏமாற்ற மாட்டார். ஒரு பிரபலமான மனிதர் சுத்தமாக இருக்க விரும்புவது தவறு இல்லை. ஆன்மீகம் கலந்த ஒரு அரசியல்வாதி வேண்டும். அவர் அரசியலுக்கு வருவது போல்தான் அவரது பேச்சு உள்ளது.

வாழ்த்துகள்
லாபத்தை எதிர்ப்பார்ப்பவர்கள் வர வேண்டாம் என்று ரஜினி சொல்லி இருக்கிறார். இது சூசகமாக, மறைமுகமாக அரசியலுக்கு அவர் வரப்போவதற்கான அறிகுறி. அவர் நிச்சயம் அரசியலுக்கு வருவார். என் அருமை நண்பர் அரசியல் பிரவேசத்திற்கு என் வாழ்த்துகள்.

நன்மை
பாஜகவில் ரஜினி சேருவாரா என்பது குறித்து இப்போது பேச வேண்டியது இல்லை. அவர் தனது வாழ்வில், இந்த தமிழகத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன். பாஜகவில் நான் சேர்ந்து வேட்பாளராக நின்ற போது என்னை அழைத்து ரஜினி பாராட்டினார். அரசியல் பற்றி பல விஷயங்களை பேசினார். அவரே இப்போது அரசியலுக்கு வந்தார் என்றால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

அரசியல் ஆதாயம்
ஆர். கே. நகர் தொகுதியில் வேட்பாளராக நின்ற போது, நான் ரஜினியை சந்தித்தது அரசியல் ஆதாயத்திற்காக அல்ல என்பது ரஜினிக்கு தெரியும். சந்திப்பின் போது எனக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்று நானும் அவரிடம் கேட்கவில்லை என்று கங்கை அமரன் கூறினார்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications