போலீஸ் வேட்டையில் சிக்கிய மதுரை ‘டாக்’ ரவி: துப்பாக்கி முனையில் கைது
சென்னை: மதுரையை சேர்ந்த பிரபல ரவுடி ‘டாக்' ரவி என்ற ரவிக்குமரை சென்னை அம்பத்தூரில் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்
லோக்சபா தேர்தலையொட்டி சென்னையில் தலை மறைவாக உள்ள ரவுடிகளை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் நல்லசிவம் மேற்பார்வையில் துணை கமிஷனர் ஜெயக்குமார் தலைமையிலான ரவுடி ஒழிப்பு தனிப்படையினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வருகிறார்கள்.
செவ்வாய்கிழமை இரவு இன்ஸ்பெக்டர்கள் சிவராம் குமார், சபாபதி, ஸ்டீபன் மற்றும் போலீசார் அம்பத்தூர் ராக்கி தியேட்டர் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் இருந்த வாலிபரிடம் துப்பாக்கி இருப்பது தெரிந்தது. மேலும் காரில் பயங்கர ஆயுதங்களும் இருந்தன.
விசாரணையில் அவன் பிரபல ரவுடி மதுரையை சேர்ந்த ‘டாக்' ரவி என்ற ரவிக்குமார் என்று தெரிந்து அவனை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட அவனது கைத்துப்பாக்கி அமெரிக்கா தயாரிப்பு ஆகும். இது எப்படி அவனுக்கு கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கைதான ‘டாக்' ரவி மீது திண்டுக்கல் மாவட்டத்தில் 4 கொலை வழக்கு உள்பட 25 வழக்குகள் உள்ளன. கடந்த 2004-ம் ஆண்டு ஆலடி அருணா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நாய் பயிற்சியாளர்
மதுரையில் வெளிநாட்டு நாய்களுக்கு பயிற்சி அளிப்பவராகவும் மற்றும் நாய் வளர்ப்பு வியாபாரம் செய்து வந்ததால் அவனுக்கு ‘டாக்' ரவி என்ற பெயர் வந்தது.
2000-ம் ஆண்டு மதுரை வரிச்சியூர் செல்வத்தின் தம்பி இளங்கோ கொலை வழக்கு, 1999-ம் ஆண்டு ரவுடி திண்டுக்கல் பாண்டியன் தம்பி நாகராஜ் கொலை வழக்குகள் உள்ளன.
சில மாதங்களுக்கு முன்பு வரிச்சியூர் இளங்கோ கொலைக்கு பழிவாங்க அவரது அண்ணன் அழகர் மற்றும் கூட்டாளிகள் டாக் ரவியை தீர்த்து கட்ட அரும்பாக்கத்தில் தங்கி இருந்த போது போலீசார் கைது செய்தனர்.
தென் மாவட்டங்களில் எதிரிகள் அதிகமானதால் ‘டாக்' ரவி தலைமறைவாக சென்னையில் பதுங்கி இருந்தான். எதிரிகளிடம் இருந்து தப்பிக்க துப்பாக்கி, பயங்கர ஆயுதங்களுடன் அவன் சுற்றி வந்தது தெரிந்தது.
பறிமுதல் செய்யப்பட்ட அமெரிக்க தயாரிப்பு துப்பாக்கியை கமிஷனர் அலுவலகத்தில் இன்று கமிஷனர் ஜார்ஜ் பார்வையிட்டார். மேலும் தலைமறைவாக உள்ள ரவுடிகளை பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications