ஷகீலாவை விட்டு விட்டு தான் மட்டும் போய் அதிமுகவில் இணைந்த கஞ்சா கருப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை : நடிகர் கஞ்சா கருப்பு இன்று ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். எந்தக் கட்சியிலும் சேரவில்லை. எந்த கட்சியிலாவது சேர நினைத்தால் நானும் நடிகை ஷகிலாவும் முதல் நபர்களாக கட்சியில் இணைவோம் என்று சட்டசபைத் தேர்தலின் போது பேட்டியளித்திருந்த கஞ்சா கருப்பு, இப்போது தனி ஆளாக போய் அதிமுகவில் இணைந்துள்ளார்.

மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணையும் விழா சென்னை ராயப்பேட்டை ஒம்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை காலை நடைபெற்றது.

இதில் நடிகர் கஞ்சா கருப்பு, த.மா.கா. கட்சியில் இருந்து விலகிய திருச்சி முன்னாள் மேயர் சாருபாலா தொண்டைமான், முன்னாள் எம்எல்ஏ வேலூர் ஞானசேகரன் ஆகியோர் இணைந்தனர். அவர்களுக்கு கட்சியின் அடிப்படை உறுப்பினர் அட்டையை வழங்கினார் ஜெயலலிதா. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.

தேர்தல் பிரச்சாரம்

தேர்தல் பிரச்சாரம்

கடந்த சட்டசபை தேர்தலின் போது சுயேச்சையாக போட்டியிட்ட முத்துமணிக்கு ஆதரவாக கஞ்சா கருப்பு பிரச்சாரம் செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், என்னை யாராவது அரசியல் கட்சியில் சேர அழைப்பு விடுத்தால் 4 நாட்களுக்கு மட்டும் முதலமைச்சர் பதவியை கேட்டு பெறுவேன். அதற்குள் செய்ய வேண்டியதை செய்துவிடலாம் என்று கூறினார்.

ஷகிலா உடன் கஞ்சா கருப்பு

ஷகிலா உடன் கஞ்சா கருப்பு

நான் முதல்வர் ஆனால் பள்ளியில் மதிய உணவுவக்கு மாணவர் ஒருவருக்கு முழு கோழி ஒன்று வழங்கப்படும். இது நகைச்சுவைக்காக நான் சொல்லவில்லை என்று கூறினார் கஞ்சா கறுப்பு. பல்வேறு கட்சிகள் எனக்கு அழைப்பு விடுத்தன. ஆனால் நான் எந்தக் கட்சியிலும் சேரவில்லை. அப்படி அரசியல் கட்சியில் இணைந்தால் நானும் நடிகை ஷகிலாவும் முதல் நபர்களாக கட்சியில் இணைவோம்.

இலவச கல்வி

இலவச கல்வி

என்னிடம் மேனேஜராக இருந்தவர் மூன்றரை கோடி ரூபாய் சுருட்டிக்கொண்டு போய்விட்டார். இப்போது படம் எடுக்கிறோம் என்று சொல்லி ஒருவன் இரண்டரை கோடியை சுட்டிவிட்டார். நான் படிக்காமல் போனதால் என்னை ஏமாற்றிவிட்டார்கள். ஆகவே நான் முதலமைச்சரானால் கல்வி இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போது கூறினார்.

வருங்கால ச.ம.உ

வருங்கால ச.ம.உ

ஒரு படத்தில் வருங்கால ச. ம. உ. என்று கூறி அலப்பறையைக் கொடுத்தவர் ஞ்சா கருப்பு. இப்போது அதிமுகவில் இணைந்ததன் மூலம் அவர் நிஜமாகவே சட்டமன்ற உறுப்பினர் ஆவாரா என்பது கேள்விக்குறி..!
பாலா படத்தில் லொடுக்குப் பாண்டியாக அறிமுகமான கருணாஸ் எம்.எல்.ஏ ஆகவில்லையா? அதேபோல பாலாவின் பிதாமகன் படத்தில் அறிமுகமான கஞ்சா கருப்புவும் எம்.எல்.ஏ ஆனாலும் ஆகலாம்.... யார் கண்டா?

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+