லைப் அகைய்ன்... கமலைப் பிரிந்த கவுதமி இனி என்ன செய்யப் போகிறார் தெரியுமா?#Gautami
புற்றுநோயிலிருந்து போராடி மீண்டு வந்த நடிகை கௌதமி தற்போது ‘லைப் அகைய்ன்’ என்ற புற்றுநோய் மறுவாழ்வு அமைப்பை தொடங்கும் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சென்னை: நடிகர் கமலை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ள நடிகை கௌதமி, தனது 'லைப் அகைய்ன்' புற்றுநோய் மறுவாழ்வு அமைப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
80களில் தமிழின் முன்னணி நாயகிகளுள் ஒருவராக திகழ்ந்தவர் நடிகை கௌதமி. ரஜினி, கமல், விஜயகாந்த் என முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

திருமணத்திற்குப் பிறகு சினிமாவில் இருந்து விலகி இருந்த அவர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாபநாசம் படம் மூலம் தமிழில் மீண்டும் மறுபிரவேசம் செய்துள்ளார். இது தவிர நடிகர் கமல் படங்கள் சிலவற்றிற்கு அவர் காஸ்ட்யூம் டிசைனராகவும் பணியாற்றினார்.
வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரையிலும் கவனம் செலுத்தி வரும் கௌதமி, புற்றுநோய் விழிப்புணர்வு அமைப்பு ஒன்றையும் நடத்தி வருகிறார். இது தவிர புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளிலும் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
நடிகை கௌதமியும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் தான். மார்பகப் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், தனது தன்னம்பிக்கையால் நோயுடன் போராடி மீண்டார். ''கண்களுக்கு வந்த கண்ணீர் கன்னங்களில் உருளாமல் பார்த்துக்கொண்டேன்'' என தனது போராட்டத்தை வலிகளைத் தாண்டிய உறுதியுடன் அவர் குறிப்பிடுகிறார்.
தற்போதும், 'லைப் அகைய்ன்' என்ற புற்றுநோய் மறுவாழ்வு அமைப்பு வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த அமைப்பு தொடர்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடுவையும் அவர் சந்தித்தார். விரைவில் தமிழக முதல்வரையும் இது தொடர்பாக சந்திக்க இருப்பதாக அவர் தெரிவித்திருந்தார்.
இந்த சூழ்நிலையில் தான், கமலைப் பிரிவதாக அவர் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications