ஓவியாவை கேவலமாக பேசும் ஜூலி.. தூண்டிவிடும் காயத்ரி!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள காயத்ரி புறனி பேசுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். ஆரம்பத்தில் ஜூலியிடம் மல்லுக்கட்டிய அவர், தற்போது அவரை வைத்து ஓவியாவை ஓரங்கட்டி வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள போட்டியாளர்களின் உண்மை முகங்கள் நாளுக்கு நாள் மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக காயத்ரி நடந்து கொள்ளும் விதம் படுகேவலமாக உள்ளது.

ஆரம்பத்தில் ஆர்த்தியுடன் கைகோர்த்துக்கொண்டு ஜூலியை உண்டு இல்லை என பார்த்தவர் காயத்ரி. ஓவியாவையும் சேரி பிஹேவியர் என கூறி சமூக வலைதளங்களில் வறுபட்டவர்.

தரக்குறைவாக விமர்சிக்கும் காயத்ரி

தரக்குறைவாக விமர்சிக்கும் காயத்ரி

பிக்பாஸ் குடும்பத்தில் உள்ளவர்களை அவர்கள் இல்லாத நேரத்தில் தரக்குறைவாக விமர்சித்து வருகிறார் காயத்ரி. குறிப்பாக ஓவியா கேரக்டரை தரம்தாழ்த்தி விமர்சித்து வருவது அவர் மீதான எரிச்சலை கூட்டுகிறது.

முதுகுக்குப் பின்னல்..

முதுகுக்குப் பின்னல்..

தனக்கு பிடித்த சாக்லேட் மில்க் ஷேக்கை சாப்பிட தனக்கு கால்சியம் குறைவாக இருப்பதாக பொய் கூறி கையும் களவுமாக சிக்கினார். தொடர்ந்து முதுகுக்குப்பின்னால் பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ள காயத்ரி ரகுராம் தற்போது கட்டிப்பிடிக்கும் புகழ் ஜூலியை கையில் போட்டுக்கொண்டு ஓவியாவை கார்னர் செய்துள்ளார்.

கேவலமாக பேசும் ஜூலி

கேவலமாக பேசும் ஜூலி

காயத்ரிக்கு ஜால்ரா போட்டு வரும் ஜூலியும் ஓவியாவை கேவலமாக பேசி வருகிறார். ஓவியாவை பார்த்தாலே எரிச்சலாக இருக்கிறது, அவரை பிடிக்கவில்லை என்கிறார் ஜூலி. நேற்றைய எபிசோடில் ஓவியாவை வெளியேற்ற உன்னால்தான் முடியும், அவளை வச்சு செய் என ஜூலியிடம் கூறுகிறார் காயத்ரி.

பொறமைப்படும் ஜூலி

பொறமைப்படும் ஜூலி

கடந்த 2 வாரங்களாக மக்களின் அதிக ஓட்டுகளை பெற்று பிக்பாஸ் குடும்பத்தில் நீடித்து வரும் ஓவியா மீது ஜூலி, காயத்ரி, ரைசா மற்றும் நமீதா உள்ளிட்ட போட்டியாளர்களுக்கு பொறாமை ஏற்பட்டுள்ளது அவர்களின் வார்த்தையில் நன்கு தெரிகிறது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
In the biggboss program Julie talking unwanted things about Oviya. Julie dont want Oviya staying in the biggboss house. Gayathri encouraging julie to fight with Oviya.
Please Wait while comments are loading...