பரணியை போல ஓவியாவையும் விரட்ட திட்டமிடும் காயத்ரி அன்ட் கோ! ஐடியா கொடுக்கும் ஜூலி!
பிக்பாஸ் வீட்டில் இருந்து பரணியை போல ஓவியாவையும் விரட்ட காயத்ரியும் அவரது சகாக்களும் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை: பிக்பாஸ் வீட்டில் இருந்து பரணியை போல ஓவியாவையும் விரட்ட காயத்ரியும் அவரது சகாக்களும் திட்டமிட்டுள்ளனர்.
அண்மையில் பரணி பிக்பாஸ் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பில்லை எனக்கூறி ஒட்டுமொத்த பிக்பாஸ் குடும்பத்தினரும் ஸ்ட்ரைக் நடத்தினர். தான் ஓரங்கட்டப்பட்டதை எண்ணி வேதனை அடைந்த பரணி சுவர் ஏறி வெளியேற முயன்றார்.
இதனால் பிக்பாஸ் விதிகளை மீறியதாகக்கூறி அவர் வெளியேற்றப்பட்டார். தற்போது அதேபோல் மக்களின் ஓட்டுகளை பெற்றுவரும் ஓவியாவையும் வெளியேற்ற பிக்பாஸ் குடும்பத்தினர் திட்டமிட்டு வருகின்றனர்.

சண்டைபோடும் சக்தி
இன்று ஒளிபரப்பப்படும் புரமோவில் ஓவியாவிடம் சக்தி மற்றும் அவரது குரூப்பினர் சண்டை போடுவது போல் காட்டப்படுகிறது. இதனால் ஓவியா அந்த இடத்தை விட்டு வெளியேறுகிறார்.

பிக்பாஸிடம் புகார்
அடுத்து ஓவியாவை ஓரங்கட்டிவிட்டு மற்ற அனைவரையும் நிற்கவைத்து திருஷ்டி சுற்றி போடுகிறார் காயத்ரி. மேலும் சக்தி, சினேகன், வையாபுரி, நமீதா, காயத்ரி, ஜூலி உள்ளிட்டட அனைவரும் பிக்பாஸிடம் ஓவியா பிரச்சனையை தூண்டி விடுவதாக புகார் அளிக்கின்றனர்.

ஐடியா கொடுக்கும் ஜூலி
ஓவியாவை ஓரங்கட்டிவிட்டு கூட்டம் போடுகின்றனர் பிக்பாஸ் குடும்பத்தினர். அப்போது ஜூலி, ஓவியாவுக்கு எதிராக அனைவரும் ஒன்று சேர்ந்தால் அவரை வெளியேற்றி விடுவார்கள் என ஐடியா கொடுக்கிறார்.

கண்ணீருடன் ஓவியா
இதைத்தொடர்ந்து ஓவியா முதல்முறையாக கண்களில் கண்ணீர் தளும்ப தனிமையில் தள்ளப்பட்டுள்ளதாக உள்ளது. மேலும் ஓவியா பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறினால்தான் மற்ற வேலைகள் நடக்கும் என கூறுகின்றனர் பிக்பாஸ் குடும்பத்தினர்.

பிளேட்டை மாற்றும் ஜூலி
வயிற்று வலியால் நேற்று ஜூலி அழுதபோது அனைவரும் அவர் நடிப்பதாக கூறிய போது ஓவியாதான் அவருக்கு ஆதரவாக இருந்தார். மற்றவர்கள் குறித்து ஓவியாவிடம் குற்றம்சாட்டிய ஜூலி, மற்றவர்களுக்கு எதிராக தன்னை தூண்டி விடுவதாக பிளேட்டை மாற்றி கேவலமாக நடந்து கொண்டார்.
Recommended Video

|
அடங்காத காயத்ரி
இந்நிலையில் தனக்கு உதவி செய்ததையும் மறந்து ஓவியாவை விரட்ட வேண்டும் என கங்கனம் கட்டிக்கொண்டு அலைகிறார் ஜூலி. ஏற்கனவே ஓவியாவை பார்த்து சேரி பிஹேவியர் என்று கூறிய காயத்ரி, நேற்று ஹேர் என்றார். தமிழில் உங்களுக்கே புரியும். அதேபோல் அவளை வெளியே போய் கவனித்துக்கொள்கிறேன் என அச்சுறுத்தும் தொனியில் பல்லைக் கடித்துக்கொண்டு சபதம் போட்டு வருகிறார்.












Click it and Unblock the Notifications