மயிலாப்பூரில் சீட் கேட்கிறார் ‘பாஜக’ காயத்ரி ரகுராம்!
சென்னை: நடிகையும், டான்ஸ் மாஸ்டருமான காயத்ரி ரகுராம் பாஜக சார்பில் சென்னை மயிலாப்பூர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனுத் தாக்கல் செய்துள்ளார்.
தமிழகத்தில் மே மாதம் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், வேட்பாளர்களைத் தேர்வு செய்யும் வேலைகளை கட்சிகள் முடுக்கி விட்டுள்ளன.
அந்தவகையில், பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள் இம்மாதம் 4ம் மற்றும் 5ம் தேதிகளில் விருப்பமனுத் தாக்கல் செய்யலாம் என கட்சி மேலிடம் அறிவித்திருந்தது. அதன்படி, கடந்த இரண்டு நாட்களாக சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விருப்பமனுவைத் தாக்கல் செய்துள்ளனர்.

கூட்டத்தில் சிக்கித் திணறும் கமலாலயம்...
கடைசி நாளான நேற்று ஏராளமானவர்கள் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து மனு தாக்கல் செய்தனர். இதனால் பாஜக அலுவலகமான கமலாலயம் அமைந்துள்ள வைத்தியராம் தெருவில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

விருப்பமனுக்கள்...
விருப்பமனு தாக்கல் செய்வதற்காக தமிழகம் முழுவதுமிருந்து கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமான பேர் காலை முதல் மாலை வரை நீண்ட வரிசையில் நின்று விருப்ப மனுக்களை கொடுத்தனர்.

காயத்ரி ரகுராம்...
இந்த நிலையில், சென்னை மயிலாப்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட நடிகை காயத்ரி ரகுராம் விருப்ப மனு தாக்கல் செய்தார். இவர் டான்ஸ் மாஸ்டராக தற்போது இருக்கிறார். சில படங்களிலும் நடித்துள்ளார்.

கலா மாஸ்டரின் அக்காள் மகள்...
இவர் டான்ஸ் மாஸ்டர் கலாவின் அக்காள் மகள் ஆவார். இவரது தந்தைதான் மறைந்த டான்ஸ் மாஸ்டர் ரகுராம். கலாவும், காயத்ரியும், திமுகவின் கலைஞர் டிவியில் ஆளுக்கொரு டான்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக உள்ளனர் என்பது நினைவிருக்கலாம். இரண்டையும் கலா மாஸ்டர்தான் தயாரித்து வழங்குகிறார்.

டான்ஸ் மாஸ்டர் பேமிலி...
காயத்ரியின் குடும்பமே டான்ஸ் குடும்பம் தான். அவரது அப்பாவும் ரகுராம், அம்மா கிரிஜா, சித்திக்கள் கலா, பிருந்தா என அனைவருமே சினிமா டான்ஸ் மாஸ்டர்கள் தான்.

பாஜக...
கடந்த 2014ம் ஆண்டு பாஜக தேசியத் தலைவர் அமித்ஷா முன்னிலையில் கங்கை அமரனோடு இணைந்து பாஜகவில் இணைந்தவர் காயத்ரி ரகுராம்.

தமிழிசைக்காகவும் மனு...
பின்னர் செய்தியாளர்கள் மத்தியில் காயத்ரி ரகுராம் பேசுகையில், ‘தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்காகவும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளதாகவும், தமிழக சட்டமன்றத் தேர்தலில் பாஜக மகத்தான வெற்றி பெறும். மாற்றம் வரும்' என்றார்.

வானதி பெயரிலும்
காயத்ரி ரகுராம் விருப்பமனுத் தாக்கல் செய்துள்ள மைலாப்பூர் தொகுதியில் தமிழக பாஜக துணைத் தலைவர் வானதி சீனிவாசன் பெயரிலும் ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஒருவேளை குஷ்பு போட்டியிட்டால்...
காங்கிரஸில் சேர்ந்துள்ள நடிகை குஷ்பு சென்னை மைலாப்பூர் அல்லது ஈரோட்டில் போட்டியிடலாம் என்று ஒரு பேச்சு உள்ளது. அப்படி மயிலாப்பூரில் குஷ்பு ஒருவேளை போட்டியிட்டால் அவருடைய நெருங்கிய தோழியான காயத்ரியுடன் மோதும் சுவாரஸ்யத்தை நாம் பார்க்க வாய்ப்பு கிடைக்கும்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு











Click it and Unblock the Notifications