தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு அனாயசமாக பாடும் நபர்.. வலை வீசி தேடும் சங்கர் மகாதேவன், ஜிப்ரான்
தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு ஒரு தோட்டத்தில் அசால்ட்டாக பாடும் நபரை சங்கர் மகாதேவனும், ஜிப்ரானும் வலைவீசி தேடி வருகின்றனர்.
சென்னை: தலையில் முண்டாசு கட்டிக் கொண்டு ஒரு தோட்டத்தில் அசால்ட்டாக கர்நாடக சங்கீதத்தை பாடும் நபரை சங்கர் மகாதேவனும், ஜிப்ரானும் தேடி வருகின்றனர்.
விஸ்வரூபம் படத்தில் சங்கர் மகாதேவன், கமல் பாடிய உன்னை காணாத நானின்று நாளில்லை என்ற பாடலை தலையில் சிவப்பு நிற முண்டாசு கட்டிக் கொண்டு அசால்ட்டாக பாடுகிறார்.

இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதை பார்த்து சங்கர் மகாதேவன் பிரமித்தார். அவர் தனது டுவிட்டரில் இவர் பாடும் பாட்டை கேட்டவுடன் எனக்கு பெருமையாக உள்ளது. நம் நாட்டில் எத்தனை பேர் இத்தனை திறமைகளுடன் இருக்கிறார்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சியாக உள்ளது.
இவர் யார், இவரை கண்டுபிடிப்பது எப்படி, இவருடன் பணியாற்ற விரும்புகிறேன் என்று பாராட்டியுள்ளார். அது போல் ஜிப்ரானும் இந்த வீடியோவை வெளியிட்டு இந்த நபர் குறித்த விவரங்கள் தெரிந்தால் சொல்லுங்கள் என்று நெட்டிசன்களின் உதவியை நாடியுள்ளார்.
இதற்கு நடிகை சுஜா வருணி உள்ளிட்டோர் அவர் கேரளத்தைச் சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் ராகேஷ் உன்னி என்றும் கூறி அவரது போன் நம்பரை அளித்துள்ளனர்.
This is called fruit of labour!
— Shankar Mahadevan (@Shankar_Live) June 30, 2018
When we hear this, it just makes me feel so so proud of our country that produces so much talent and is so rich in culture. Who is this guy???
How can I trace him?
Need help & would like to work with him. pic.twitter.com/SWqGQkmChb
Does anyone have this persons/Singers Contact ?#Singer #AmazingVoice pic.twitter.com/TPfcKqqS8d
— Ghibran (@GhibranOfficial) July 1, 2018












Click it and Unblock the Notifications